மின் கட்­டணம், இயந்­திர எண்­ணெயின் விலை அடுத்த மாதம் குறை­வ­டையும்

palithaகொழும்பு: நாட்டில் பல தரப்­பி­னரும் நன்­மை­ய­டையும் வகையில் மின் கட்டணம் மற்றும் இயந்திரங்­களை இயக்க பயன்­ப­டுத்தும் எண்ணெயின் (எஞ்சின் ஒயில்) விலை குறைகப்படவுள்ளதாக தெரிவிக்கும் மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார மின் இணைப்பு பெற்றக்கொள்ளும் முறையும் இலகுவாக்கப்பட்டுள்ளதா­கவும் தெரி­வித்தார்.

கொழும்பு, தெமட்­ட­கொடை இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் இடம்­பெற்ற ஊடகவியலாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றிப் பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அதற்கி­ணங்க நாட்டின் பொது­மக்­க­ளுக்கு அதிக சலு­கை­களை வழங்கும் நோக்­கத்தில் மின் கட்­டணம் குறைக்கப்பட­வுள்­ளது. அத்­துடன் இயந்­திர எண்­ணெயின் விலையும் விரை­வாக குறைப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இது­வ­ரையில் மக்கள் மின் இணைப்­புக்­களை பெற்றுக் கொள்­வதில் இருந்த இப்பிரச்சினை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் கட்­டணம் செலுத்­திய உடன் அள­வீட்டு மானி பொருத்­தப்­பட்டு விரைவில் மின் இணைப்பு வழங்­கப்­படும். அதன்போது மின் இணைப்பை பெறு­வ­தற்­காக தற்­போது அறவிடப்படும் பணத்­திலும் கணி­ச­மான தொகை குறைக்­கப்­படும். மார்ச் மாதம் ஆறாம் திக­தியே இந்த வேலைத் திட்­டமும் கட்­டணக் குறைப்பும் அமு­லுக்கு வரும்.

மேலும் மின் இணைப்பு பெறா­த­வர்கள் எதிர்­கா­லத்தில் பெற்றுக் கொள்­வ­தற்­காக மின்­சார சபையுடன் தொடர்பு கொள்ள வேண்­டி­யது மட்­டுமே அவ­சியம். அதற்­காக மின்­சார சபையினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு விரை­வாக வந்து மின் இணைப்பை பெற்றுக்கொடுக்கும்.

அத்­தோடு மின் கட்­டண குறைப்பு செய்­யப்­படும் போது இயந்­திர எண்ணெய் (எஞ்சின் ஒயில்) க்காக அற­வி­டப்­படும் கட்­ட­ணத்­திலும் குறைப்பு செய்­யப்­படும். இதனால் பொதுமக்கள் போக்­கு­வ­ரத்து மற்றும் கடல் சார் தொழில் செய்­ப­வர்­களும் இதனால் நன்மை­ய­டைவர் என எதிர்­பார்த்­துள்ளோம் என்று அவர் மேலும் தெரி­வித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் போக்குவரத்து சங்க உரிமையாளர்களின் சங்கத்தின் இயந்திர எண்ணெய் விலை குறைக்கப்பட வேணடும் என கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Published by

Leave a comment