உலகக்கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் தொடர் தோல்வி: நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

pakistanலாஹூர்: உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி லாஹூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் ‘லீக்’ போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ் தான் அணி, அடுத்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத்தலைவர் அகமத் கான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுப்பினர் நஜீம் சேத் ஆகியோர் பதிலளிக்க மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரிஸ்வான் குல் என்பவர் லாகூர் மேல் நீதிமன்றத்தில், பாகிஸ்தான் அணியின் மோசமான விளையாட்டு தொடர்பாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன? என்பதை விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. ஒருவேளை சூதாட்டக் காரரர்களிடம் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கியிருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்வியானது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என பாகிஸ்தான் அணியின் முன் னாள் தலைவர் வசீம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் அணியின் தற்போ தைய தலைவர் மிஸ்பா உல் ஹக் ஒரு கோழை என்று அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடுத்தடுத்த, இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருப்பதால் பாகிஸ்தான் அணி பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் குறைந்தது 3இல் வெற்றி பெற்றால் தான் காலிறுதியில் பங்குபெறும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment