காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் 85 வது ஆண்டினை முன்னிட்டு பல்வெறு நிகழ்வுகள் இடம்பெற இருப்பதுடன் அதன் தொடராக கழகங்ளுக்கிடையிலான முதலாவது உதைபந்தாட்ட போட்டி (03.04.2015 வெள்ளி) தேசிய பாடசாலை மைதானத்தில் கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய முதலாவது போட்டி காத்தான்குடி விக்டறி விளையாட்டு கழகததிற்கும் அக்கரைப்பற்று IRSCவிளையாட்டு கழகததிற்கும் இடையில் நடைபெற்றது. இதில் 8-0 என்ற அடிப்டையில் காத்தான்குடி விக்டறி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. மேற்படி போட்டியின் நடுவராக காத்தான்குடி மத்திஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர் இன்ஷாட அலி கடமையாற்றினார்.
மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,மட்டக்களப்பு மத்தி பிரதி வலய கல்விப் பணிப்பாளர் எம்.இஸ்மாலெப்பை, காத்தான்குடி உதைபந்தாட்ட லீக் இன் உப தலைவர் எம்.எம் ஸாஹிர், காத்தான்குடி மத்திய கல்லூரியின் உதவி அதிபர்,எஸ்.எச்.பிர்தௌஸ் உட்பட ஆசியர்கள்,அதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வின் போது கழக வீரர்களின் அறிமுகம் மற்றும் வீரர்களின் மரியாதை என்பனவும் இடம் பெற்றது.
இத்தொடரின் ஏனைய போட்டிகள் யாவும் பிரதி வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் தொடராக இடம் பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
Published by




Leave a comment