வாழைச்சேனை: கல்குடா பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைகளில் ஒன்றாக இணங்கானப்பட்டு வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் ஓட்டமாவாடி, வாழைச்சேனை,கிரான் பிரதேசத்திற்கான தூய குடிநீர் வழங்கும் திட்டம் (04.04.2015 சனிக்கிழமை) இன்று பி.ப.03.00 மணிக்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும், நகர அபிவிருத்தி தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அமைச்சருமான றவுப் ஹக்கீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நீர் மாசடைதல்,பல்வேறுபட்ட நோய்கள் காரணமாக் மேற்படி பிரதேச மக்கள் எதிர் நோக்கி வந்த பிரச்சினைகளை சுற்றிக் காட்டிய கல்குடா பிரதேச சூறா சபை மற்றும் முஸ்லிம் காங்கிரசின்; முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி வேளைதிட்டத்தினை முன்னெடுக்குமாறு அமைச்சரின் பணிப்புலைக்கமைய அமைச்சரின் இணைப்பச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன் முன்னெடுத்து வந்தார்.
இத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னால் கிழக்க மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன்,
கல்குடா தொகுதிக்கான நீர்வழங்கள் திட்டமானது இரண்டு கட்டங்களாக மேற் கொள்ளப்பட இருக்கின்றது
1)இடைக்கால திட்டம்
2)நிரந்தர திட்டம்
இடைக்கால திட்டமானது அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட இருப்பதாகவும் இத்திட்டத்திற்காக 1.27 இலட்சம் செலவில் மேற்படி திட்டம் அமுல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஊண்ணிச்சை குழத்தின் ஊடாக பெறப்படும் நீரினைப்பயன்படுத்தியே இடைக்கால திட்டம் அமுல்படுத்தப்பட இருப்பதனூடாக மக்களின் நீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.கல்குடா தொகுதிக்கான நிரந்தர குடிநீர் திட்டம் இரண்டு கட்டங்களாக அமுல்படுத்தப்பட உள்ளது. இத்தட்டத்திக்கான உத்தேச மதிப்பீடு சுமார் 18 ஆயிரம் மில்லியன் ஆகும். இத்திட்டமானது உண்ணிச்சை, கரடியனாறு ஊடாக கல்குடாவுக்கு நீர் இணைப்பினை பெற்றுக் கொடுக்கும் நிரந்தர திட்டமாகும்.
இடைக்கால திட்டத்தின் மூலமாக முதலில் கல்குடா மக்களின அவசர குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும் என்பதுடன் இரண்டாவது திட்டத்தின் ஊடாக நிரந்தர குடிநீர பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் எனவும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளரும,; அமைச்சரின் இணைப்பச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
இன்றைய வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் பஷீர்சேகுதாவுத் உட்பட முஸ்லிம் காங்கிரிசின் முக்கியஸ்தர்கள்,உயர் மட்ட அதிகார்கள் பலரும் கலந்து கொள்ள இருப்தாகவும் யூ.எல்.உம்.உன்.முபீன தெரிவித்தார்.
Published by

![Hakeem[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/hakeem1.jpg?w=114&h=150)
Leave a comment