SLMCயின் தலைமையினால் கல்குடாவின் குடிநீர் பிரச்சனைக்கும், புதுமுக வேட்பாளருக்குமான உடனடி தீர்வு

kalkudah– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

கல்குடா: கல்குடாவில் அரசியல் ஆயுதமாக அன்மைக்காலமாக பலராலும் பயண்படுத்தப்பட்டு வந்த தூய குடிநீர் பிரச்சனையானது கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா அமைப்பினரின் தொடர்ந் தேர்ச்சியான முயற்சியின் பலனாக நேற்று சனிக்கிழமை 04.04.2015 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிகழ்வின் அடுத்த முக்கிய அம்சமாக அன்மைக் காலமாக கல்குடாவில் புதுமுக வேட்பாளர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்படவுள்ள விடயம் சம்பந்தமாக கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியால், எச்.எம்.எம்.முஸ்தபா, விரிவுரையாளர் நாசர் போன்றோரின் பெயர்கள் பேசப்பட்டுவந்த நிலையில் நேற்று கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடிநீர் திட்டத்துக்கான அடிகல் நடும் நிகழ்வுக்கு பிற்பாடு இடம்பெற்ற பொதுக்கூட்டதில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் றவூப் ஹக்கீமினால் செரண்டிப் நிறுவனத்தின் பிரதான கணக்காளரும் கணக்கறிஞறுமான எச்.எம்.எம்.றியாலினை எதிர்வரும் பொதுத்தேர்தலில் கல்குடாவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் மூலம் கல்குடாவின் பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்படும் என்றும், அதற்காகா கல்குடா மக்கள் பிரதேசவாத அரசியலை புறம்தள்ளி ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என வேண்டியவராக கணக்கறிஞர் றியாலினை பகிரங்கமாக அறிமுகப்படுத்தினார்.

kalkudah

மேலும் முதற்கட்டமாக ஆறு மாதத்துக்குள் நிறைவடையும் விதமாக 127 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வினை ஆரம்பித்து வைக்குமுகமாக கல்குடா மஜ்லிஸிஸ் ஷூராவின் ஏற்பாட்டில் மாவடிசேனையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதம அதீதியாக கலந்து கொண்டு குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்தார். 12 மாதங்களில் முடிவடையவுள்ள இரண்டாம் கட்ட வேலைக்காக 590 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதும் இங்கு முக்கிய விடயமாகும்.

கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா அமைப்பினர் அமைச்சர் ஹக்கீமை சில வாரங்களுக்கு முன்பு கொழும்பில் சந்தித்து தூய குடிநீர் விநியோகத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி கொண்டதற்கமைவாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கல்குடா ஆகியவற்றின் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கியதாக நீர்க்குழாய்களைப் பதிப்பதனூடாக அனைத்து வீடுகள், கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் என்பனவற்றிற்கு நீரிணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்காக சித்தாண்டியில் பிரத்தியேகமான நீர்த்தாங்கி, நீர் உந்து நிலையம் என்பன அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான செய்யித் அலி

ஸாஹிர் மௌலானா, பொறியியலாளர் சிப்லி பாறுக், சட்டத்தரணி ஜே.எம். லாஹிர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.அஹமத், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் எம்.பி.எஸ்.ஹுஸைன், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.ஏ.எம்.றியாஸ்,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்குப் பிராந்திய பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் யூ.எல்.ரத்னபால, கிழக்குப் பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் என். சுதேஷன், உதவிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எம்.நஸீல், மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் கே.விநோதன், பிரதான பொறியியலாளர் (நிர்மாணம்) டீ.ஏ.பிரகாஷ், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் ஐ.எல்.ஹைதர்அலி ஆகியோர் உட்பட பெரும்பாலானோர் கலந்து சிறப்பித்தனர். –

Published by

Leave a comment