-
மஹிந்தவை பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை புதன்கிழமை இடம்பெறுகிறது
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.எதிர்வரும் 3ம் திகதி இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.மஹிந்த ராபஜக்சவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
-
“பாலமுனை கிராம அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தி வரலாற்று சாதணையும் படைத்துள்ளேன்”: ஜ.தே.க.அமைப்பாளர் முஸ்தபா
– முகம்மட் சஜி காத்தான்குடி: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட பாலமுனை கிராமமானது 1990 காலப்பகுதிக்குப் பின்னர் இரண்டு கிராம சேவகர் பிரிவாக காணப்பட்டது. இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் ஒரு கிராம சேவகர் பிரிவாக மாற்றப்பட்டது. சுமார் 2270 குடும்பங்களை உள்ளடக்கியதாக இரண்டு வட்டாரமாக காணப்பட்டு வந்த இக்கிராமம் இன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்று கிராம சேவகர் பிரிவுகளாக வகுப்பதற்குறிய உத்தரவுக்கடிதம் காத்தான்குடி
-
சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்ல முற்பட்ட 5 வயதுக்கு குறைவான பிள்ளைகள் உள்ள 29 தாய்மார்கள் கைது!
கொழும்பு: சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக செல்ல முயன்ற 29 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். போலி தகவல்களை சமர்ப்பித்து சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டுக்கு தொழில்புரிய செல்பவர்கள் குறித்து கிடைத்துவரும் தகவல்களையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள இது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
-
அரசாங்கத்தில் இருந்து விலகிய 4 அமைச்சர்களின் பரிதாப நிலை!
கொழும்பு: டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கடந்த வாரம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர். அரசாங்கத்தில் இருந்து விலகி தம்முடன் இணைந்து கொள்ளுமாறு இவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
‘ஐக்கிய மக்கள் ஒன்றியம்’ எனும் அமைப்பினரால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
‘ஃபீஸஃபீலில்லாஹ்’ – அழ்ழாஹ்வின் பாதையில் ஒன்றுபடுவோம் – 02 (வெளியீடு: ஐக்கிய மக்கள் ஒன்றியம், ஊர் வீதி, காத்தான்குடி 01 – 29.05.2015) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகின்றோம்.
-
“இலத்திரனியல் அடையாள அட்டையானது சட்டத்துக்கு புறம்பான செயல்களை தடுக்கும்”: ஆணையாளர் நசீர் (காணொளி)
அஹமட் இர்ஸாட்:- தமிழ் பேசும் மகன் ஒருவர் ஆட்பதிவு தினைகளத்தில் ஆணையாளர் கடமையாற்றுவதானது பெருமைபட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் இந்த நாட்டில் வாழுக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்காக உங்களுடைய சிறிய அறிமுகமொன்றினை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
-
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலைகளையும்,வன்முறைச் சம்பவங்களையும் கண்டித்து கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: பர்மா மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலைகளையும்,வன்முறைச் சம்பவங்களையும் கண்டித்து இலங்கையின் தலைநகர் கொழும்பில் முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை நடத்தினர். இன்று வெள்ளிக்கிழமை தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பேரணியாக ரொஸ்மிட் பிளேஸில் அமைந்துள்ள மியன்மார் உயர் ஸ்தானிகராலாயத்தினை நோக்கி சென்றனர்.
-
“தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்”
புங்குடுதீவு: “எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரியான நிஷாந்தி தெரிவித்தார்.
-
ஐநா – மியன்மார் அதிகாரிகள் இடையே காரசார விவாதம்
ஜெனீவா: ரொஹிஞ்சா சிறுபான்மையினத்தவரை நடத்தும் முறை குறித்து மியன்மார் அதிகாரிகளும் ஐநா அதிகாரிகளும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.ஆசிய குடியேறிகள் நெருக்கடி குறித்த சந்திப்பில் பேசிய, ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் துணை ஆணையர் வொல்க்கர் டுர்க், மியன்மார் தனது அனைத்து மக்களுக்கான பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும் என்று கூறினார்.
-
பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும், இக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று 29 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது.
-
சிறந்த வர்த்தகர் தெரிவும் 2015 ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளும்
– எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத் கொழும்பு: இலங்கையில் சிறந்த வர்த்தகர் தெரிவும் 2015 ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.வர்த்தக மேம்பாட்டு சம்மேளனத்தின் ஏற்றபாட்டில் இந்த தெரிவு இடம் பெறவுள்ளது.இந்த நிகழ்வின் உத்தியோக பூர்வ ஊடக பிரச்சாரப் பணிகள் கொழும்பு ரமடா ஹோட்டலில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
மரணம் ஓர் நினைவூட்டல்
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா, 24.05.2015 (ஞாயிற்றுக்கிழமை) (நன்றி: சுவனப்பாதை)