Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நாட்டிற்கு பெரு நன்மை பயக்கும் 20வது திருத்தம்

    கொழும்பு: இலங்கையின் அண்மைக் கால வரலாற்றில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் ஒன்று தான் தேர்தல் முறை மறுசீரமைப்பு ஆகும். ஏனெனில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமை நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பலவிதமாக பாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டுக்குப் பொருத்தமான தேர்தல் முறைமை மிக அவசியம் எனப் பல மட்டங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

  • “இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் தொடர்கிறது”

    நியுயோர்க்: இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

  • பிரித்தானிய மெத்தடிஸ்ட் திருச்சபையில் பாலியல் துஷ்பிரயோகங்கள்

    லண்டன்: பிரிட்டனின் மெத்தடிஸ்ட் திருச்சபையில் ஏராளமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளது சுயாதீன விசாரணை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அந்தத் திருச்சபையைச் சேர்ந்த சுமார் 2000 பிரசாரகர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் உடலியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருந்தனர் என அந்த சுயாதீன விசாரணை அறிக்கை கூறுகிறது.

  • ‘ரோஹிஞ்சா மக்களுக்காக ஆங் சான் சூசி பேச வேண்டும்’: தலாய் லாமா

    திபெத்: மியன்மாரில் உள்ள ரொஹிஞ்சா இன மக்களுக்கு உதவுவதற்கு, நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து கடந்த காலங்களில் தான் ஆங் சான் சூசி-யிடம் பேசியிருப்பதாகவும், அது தொடர்பில் அவரால் இன்னும் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • மஹிந்தவின் ஆட்சி நிலைத்திருந்தால் இலங்கையும் பர்மாவாகவே மாறியிருக்கும்: பைரூஸ் ஹாஜி

    அஹமட் இர்சாத் கொழும்பு: இன்று அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை திட்டமிட்டு அழித்து வருக்கின்ற பர்மா நாடானது சென்ற வருடம் அந்த நாட்டில் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் இருந்த கடும்போக்கு சிந்தனையுள்ள பெளத்த மதகுரு தலைவரை எமது நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பொதுபலசேனாவின் விடாப்பிடியின் காரணமாக கொழும்புக்கு அழைத்து வந்து பல ஆயிரக்கணக்கான பெளத்த துறவிகளை ஒன்று திரட்டி எமது நாட்டு முஸ்லிம்களின் அபிலாசைகளை புறந்தள்ளியவர்களாக பெரும் மாநாடு ஒன்றினை நடாத்தியது.

  • அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் : அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தித்து நடத்திய கலந்துரையாடல்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் இடம் பெயர்வுகளுக்குள்ளான மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் துரித நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பது தொடரபில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் அவர்களிடத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோளினை முன் வைத்துள்ளார்.

  • உழவு இயந்திரமொன்றின் இழுவை பெட்டி முறிந்து விழுந்ததனால் உதவியாளர் உயிரிழப்பு

    எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் ஏறாவூர்: ஏறாவூர் வந்தாறுமூலை பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்றின் இழுவை பெட்டி முறிந்து விழுந்ததனால் உதவியாளர் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை உப்போடை வீதியில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் 24 வயதுடைய இளயதம்பி திலகராஜ் என்பவரே பலியானவரென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

  • பசில் ராஜபக்ஸவின் மனைவியும் கைதுசெய்யப்படலாம்!

    கொழும்பு: கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைமுகம் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட சீனா நிறுவனத்தினால் 600 மில்லியன் ரூபாய் புஷ்பா ராஜபக்ச என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  • மியன்மார் தூதுவருக்கு ரிசாத் கடிதம்: பொது அமைப்புக்களுடன் இன்று அவசர சந்திப்பு

    – ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

  • எரியும் மியன்மார் முஸ்லிம்களும் நகைப்பிற்கிடமான முகநூல் போராட்டமும்….

    – AK-48 காத்தான்குடி: மியன்மார் முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்படுவது 2012 இல் இருந்துதான் முகநூல் வாயிலாக எமக்கு தெரியக்கிடைக்கிறது. இருந்தாலும் 60 வருடங்களாக அங்குள்ள முஸ்லிம்கள் அழித்து, எரித்தும் போதாதென்று சொந்த மண்ணை விட்டும் அடித்து விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அங்குள்ள பௌத்த பேரினவாதிகளால்.

  • குடியிருப்புக் காணிகள் வனப் பிரதேசமாக 2012 இல் பிரகடனம்

    கொழும்பு: தமக்குரிய காணிகளை ஜி. பி. ஆர். எஸ். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி, முள்ளிபுரம் மக்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.

  • ஊழல் குற்றச்சாட்டில் பல ஃபிஃபா அதிகாரிகள் கைது

    லண்டன்: கால்பந்து விளையாட்டை வெளிப்படையாகவும் அனைவரும் விளையாடி களிக்கும்படியும் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஊழல் புரிந்து தம்மை வளப்படுத்திக் கொண்டனர் என அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் லெரெட்டா லின்ச் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 424 425 426 427 428 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar