சிறந்த வர்த்தகர் தெரிவும் 2015 ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளும்

rishad– எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத் 

கொழும்பு: இலங்கையில் சிறந்த வர்த்தகர் தெரிவும் 2015 ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.வர்த்தக மேம்பாட்டு சம்மேளனத்தின் ஏற்றபாட்டில் இந்த தெரிவு இடம் பெறவுள்ளது.இந்த நிகழ்வின் உத்தியோக பூர்வ ஊடக பிரச்சாரப் பணிகள் கொழும்பு ரமடா ஹோட்டலில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

20 வது முறையாக இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளதால் நாடு தழுவிய ரீதியில் சிறந்த வியாபாரி தெரிவினை வர்த்தக சம்மேளனம் முன்னெடுக்கவுள்ளது.இலங்கையின் பொருளாதாரத்துக்கு போட்டித்தன்மையினை ஏற்படுத்தும் வகையுpல் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

rishad

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி,வெளிநாடுகளின் முதலீடுகள் உள்ளிட்ட வர்த்தக சமூகத்தின் நன்மைகள் தொடர்பில் அதிக கவனத்தை செலுத்தியுள்ளதாகவும்,இவ்வாறான ஊக்குவிப்புக்கள் தெரிவுகள் மூலம் வர்த்தக சமூகத்திற்கு மேலும் புத்தூக்கம் கிடைப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் இதன் போது கூறினார்.

DSC_9713

Published by

Leave a comment