மஹிந்தவை பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை புதன்கிழமை இடம்பெறுகிறது

mahindaகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.எதிர்வரும் 3ம் திகதி இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.மஹிந்த ராபஜக்சவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தங்கியிருக்கும் மிரிஹானவில் அமைந்துள்ள இல்லத்தில் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். எனவே, அது குறித்து பேசாது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணி அல்லது மஹஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் ஊடாக மஹிந்தவை களமிறக்க முயற்சிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிறைவேற்றுச் சபையின் ஊடாகவே தீர்மானங்களை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment