கொழும்பு: பர்மா மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலைகளையும்,வன்முறைச் சம்பவங்களையும் கண்டித்து இலங்கையின் தலைநகர் கொழும்பில் முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை நடத்தினர். இன்று வெள்ளிக்கிழமை தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பேரணியாக ரொஸ்மிட் பிளேஸில் அமைந்துள்ள மியன்மார் உயர் ஸ்தானிகராலாயத்தினை நோக்கி சென்றனர்.
ஜக்கிய சமாதான முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்ட பேரணில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்,எம்.பைரூஸ்,மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி,கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சராப்தீன் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியும்,கோஷஹ்களையும் முழங்கியவாறு சென்றனர்.ஆர்ப்பட்ட பேரணியினால் இப்பிரதேசத்தின் போக்குவரத்து நெறிசல் காணப்பட்டது.
அதே வேளை கலகம் அடக்கும் பொலீஸார் உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஜந்து பேரை தூதரக வலாயகத்துக்குள் சென்று தமது கண்டன மகஜரை கையளிக்க பொலீஸார் அனுமதியளித்தனர்.
அந்த வகையில் அமைச்சர் றிசாத்,மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்,பைருஸ் ஹாஜி,ஆசாத் சாலி ஆகியோர் மகஜரை உயர் ஸ்தானிகரிடத்தில் கையளித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மியன்மார் முஸ்லிம்களை கொல்லாதே,உலக முஸ்லிம் தலைவர்களே மியன்மார் முஸ்லிம்களை பாதுகாருங்கள்.மியன்மார் பற்றி ஜ.நா.ஏன் மௌனம் போன்ற வாசகங்கள் இங்குள்ள பதாகைகளில் காணப்பட்டது.
இறுதியாக மியன்மார் நாட்டு முஸ்லிம்களுக்காக வேண்டிய விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றன.
Published by





Leave a comment