-
காத்தான்குடி ஊர் வீதி அபிவிருத்திக் கனவும் கலைந்துவிடுமோ?
– எம்.எச்.எம். அன்வர் கத்தான்குடி: காத்தான்குடி ஊர்வீதி அபிவிருத்தி இடம்பெறுகிறது. பழைய கல்முனை வீதி என அழைக்கப்படும் ஊர் வீதி அபிவிருத்தியானது ஆரையம்பதியிலிருந்து 600 மீட்டரும் மஞ்சந்தொடுவாயிலிருந்து 600 மீட்டரும் வடிகான்களுடன் கூடிய வீதியாக தற்போது புனரமைப்பச்செய்யப்படுகிறது. இவ்வீதி விஸ்தரிப்பின் நடுப்பகுதி எப்போது புணரமைப்புச்செய்யப்படும் என அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதில் பலர் வீடுகளையும் மதில்களையும் உடைத்தும் விட்டனர்.
-
புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் பலி!
ஏறாவூர்: மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுநேர கடுகதி புகையிரதத்தில் மாவடிவேம்பு பிரதேசத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
-
மஹிந்தவுக்கு மனநோய்: அவசர மருத்துவம் தேவை என்கின்றார் மனோ கணேசன்
கொழும்பு: இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். இவருக்கு இன்று உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இன்று பறக்காத புலிக்கொடிகளை பறப்பதாக இவர் கூறுகிறார். இது இன்று இவர் கண்களுக்கு மாத்திரம் தெரிகிறது.
-
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஹாசிப் யாஸீன் அம்பாறை: புங்குடுதீவு மாணவி வித்யா வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அம்பாறை மாவட்ட காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று (27) காரைதீவு பிரதேச செயலக முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இணங்க மறுத்த 20 வயது பெண்ணை எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
– AF-90 பக்தாத்: அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். 9 வயது சிறுமியைக் கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவர்களாக உள்ளனர் தீவிரவாதிகள்.
-
ஜனாதிபதி மைத்திரியின் எளிமையான யாழ்.விஜயம் மகிந்தவுக்கு வீழ்ந்த உச்சி அடி
யாழ்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தில் இரகசியம் பேணப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதற்கு அப்பால், தனது ஆட்சிக்குட்பட்ட ஓரிடத்திற்கு விஜயம் செய்வதாயின் அதற்குப் பெரும் எடுப்புத் தேவையில்லை.
-
முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு
கொழும்பு: மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் நாளை இடம்பெறவுள்ளது. நாளை பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரவி கருணாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.
-
சங்கக்காரவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியட் விருது
மும்பை: இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியட் விருதை வென்றுள்ளார். அதே போன்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சிறந்த சர்வதேச பந்து வீச்சாளராக விருது வென்றார். 2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருது வழங்கும் விழா மும்பையில் திங்களன்று நடைபெற்றது.
-
ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிள்கள்
கொழும்பு: ஊடகவியலாளர்களுக்கு தீர்வை அற்ற (Duty free) முறையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. தகவல் ஊடகத்துறை அமைச்சு நிதி அமைச்சு என்பன இணைந்து நேற்று இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.ஊடகத்துறையமைச்சர் கயந்த கருணாதிலக்க நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இணைந்து நிதியமைச்சில் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டை தொடர்ந்தே இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
“பொறுப்பு கூறும் நிறுவனம் பாராளுமன்றமே: ராஜபக்ஷவின் ஆட்சியில் இருந்தவர்களுக்கு இப்போதுதான் ஞானம் பிறக்கிறது”
கொழும்பு: நிதி தொடர்பான சகல விடயங்களுக்கும் பொறுப்பு கூறும் நிறுவனமாக பாராளுமன்றமே திகழ்கின்றது என்பதை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெரிவித்து வந்த போதும் தற்போதுதான் ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவர்களுக்கு இது தொடர்பில் தெளிவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
-
குற்றவாளிகளுக்கு உச்சதண்டனை யாழ்ப்பாணத்தில் வித்தியாவின் தாயிடம் ஜனாதிபதி அறிவிப்பு
யாழ்ப்பாணம்: புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு பட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றம் மூலம் உச்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு நிலைமைகளை