ஐநா – மியன்மார் அதிகாரிகள் இடையே காரசார விவாதம்

mianmarஜெனீவா: ரொஹிஞ்சா சிறுபான்மையினத்தவரை நடத்தும் முறை குறித்து மியன்மார் அதிகாரிகளும் ஐநா அதிகாரிகளும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.ஆசிய குடியேறிகள் நெருக்கடி குறித்த சந்திப்பில் பேசிய, ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் துணை ஆணையர் வொல்க்கர் டுர்க், மியன்மார் தனது அனைத்து மக்களுக்கான பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும் என்று கூறினார்.

மியன்மார் ரொஹிஞ்சாக்களை தமது பிரஜைகளாக அங்கீகரிக்கவில்லை.

ஆனால், தமது நாட்டை இந்த விசயத்தில் தனிமைப்படுத்த முயலக் கூடாது என்று பேசிய மியன்மார் நாட்டு பிரதிநிதியான டின் லின், இதில் உண்மையான பிரச்சினை ஆட்களை சட்டவிரோதமாக கடத்தும் விவகாரமே என்று குறிப்பிட்டார்.

mianmar

கடந்த மாதத்தில் தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் கரைதட்டினார்கள். மேலும் நூற்றுக்கணக்கானோர் நடுக்கடலில் அகப்பட்டிருக்கலாம்.

Published by

Leave a comment