“பாலமுனை கிராம அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தி வரலாற்று சாதணையும் படைத்துள்ளேன்”: ஜ.தே.க.அமைப்பாளர் முஸ்தபா

musthafa unp kattankudy– முகம்மட் சஜி

காத்தான்குடி: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட பாலமுனை கிராமமானது 1990 காலப்பகுதிக்குப் பின்னர் இரண்டு கிராம சேவகர் பிரிவாக காணப்பட்டது. இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் ஒரு கிராம சேவகர் பிரிவாக மாற்றப்பட்டது. சுமார் 2270 குடும்பங்களை உள்ளடக்கியதாக இரண்டு வட்டாரமாக காணப்பட்டு வந்த இக்கிராமம் இன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்று கிராம சேவகர் பிரிவுகளாக வகுப்பதற்குறிய உத்தரவுக்கடிதம் காத்தான்குடி

ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மைக்கள் பெரேறாவுக்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க வழங்கிய விசேட உத்தரவுக்கு அமைவாக அமைச்சின் செயலாளர் பொரலஸ்ஸவினால் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கும் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கும் பாலமுனை கிராமத்தினை இருப்பதுடன் சேர்த்து 2 அல்லது 3 கிராம சேவகர் பிரிவாக பிரிக்கமாரு கட்டளை பிரப்பிக்கப்பட்ட கடிதம் 2015.03.10 திகதியன்று அனுப்பிவைக்கப்பட்டகற்கு அமைவாக பாலமுனைப்பகுதியில் அகற்கான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு அதற்கு பொருப்பான அதிகாரிகள் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதையடுத்து அப் பகுதி மக்கள் காத்தான்குடி ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபாவுக்கும் தற்போதய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

musthafa unp kattankudy
காத்தான்குடி ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா

கடந்த அரசாங்கத்தின் எந்தவொரு மக்கள் பிரதிநிதியாலும் மேற்கொள்ளப்படாத இத்திட்டத்தினை ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா மேற்கொண்டிருப்பது பாலமுனை மக்களுக்கு கிடைத்த அதிக பயணாக கருதப்படுகிறது.

Published by

Leave a comment