காத்தான்குடி: ஜம்இய்யது தாறுல் பிர் நிறுவனத்தினூடாக 61 வறிய குடும்பங்களுக்கான குழாய்க் கிணறு, மோட்டர், தாங்கி விநியோகிக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இதன் போது அதிதிகளினால் காத்தான்குடி மற்றும் அதனை அன்மித்த கிராமங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கு இவை வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் உலமாக்கள், காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஜம்இய்யது தாறுல் பிர் நிறுவனத்தினூடாக காத்தான்குடி மற்றும் அதனை அன்மித்த பிரதேசத்திலுள்ள ஏழைகளை மையப்படுத்தி இதுவரை 3000 திற்கும் மேற்பட்ட குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment