காத்தான்குடியில் தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் கலந்து கொள்ளும் இஸ்லாமிய மாநாடு

Kovai S. Iyoobபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் கலந்து கொள்ளும் இஸ்லாமிய மாநாடு 13-06-2015 நாளை மறுதினம் சனிக்கிழமை காத்தான்குடி -06 மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாகவுள்ள பஸ்பலா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. றவூப் தெரிவித்தார்.

இங்கு மறுமை வெற்றி யாருக்கு? எனும் தலைப்பில் தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் விஷேட சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.

இதில் அனைத்து சகோதரர்களையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

unnamed

Published by

Leave a comment