நியுயோர்க்: சர்ச்சைக்குரிய ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு சட்டம் ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அமெரிக்க கொங்கிரஸ் அவையால் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டபோதும் அது சர்வதேச கொள்கை தொடர்பில் தீர்மானிக்கும் ஜனாதிபதியின் உரிமையை மீறுவதாக நீதிமன்றத்தின் தீர்ப் பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா அரசுகள் அங்கீகரிக்கவில்லை. ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் பிறந்த இடமாக இஸ்ரேலை பதிவு செய்வதை அமெரிக்க இராஜhங்கத் திணைக்களம் நிராகரித்து வருகிறது.
ஜெரூசலத்திற்கு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இரு தரப்பும் உரிமை கொண்டாடும் நிலையில் அதன் அந்தஸ்து குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. ஜெரூசலத்தில் பிறந்த 12 வயது அமெரிக்க பிரஜை ஒருவரின் பெற்றோரே இந்த வழக்கை தொடுத்திருந்தனர். தமது குழந்தை இஸ்ரேலில் பிறந்ததாக பதிவு செய்யுமாறு இவர்கள் வாதாடியபோதும் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.
சுமார் 50,000 அமெரிக்க பிரஜைகள் ஜெரூசலத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
![al_aqsa_mosque[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/al_aqsa_mosque1.jpg?w=150&h=104)
Leave a comment