Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும்முகமாக பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படல் வேண்டும் – தேர்தல்கள் திணைக்களம் பணிப்பு

    எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: நிறுவனத் தலைவர்கள் தமது பணியாளர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும்முகமாக விடுமுறை வழங்க வேண்டுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக 40 கிலோமீற்றருக்கு உட்பட்ட தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அரை நாள் விடுமுறையும், 40 கிலோமீற்றருக்கும் 100 கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு முழு நாள் விடுமுறையும்,

  • தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த பின்னர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – தேர்தல்கள் செயலகம்

    – எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதாகவும். அமைதியான காலப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்ட என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

  • வேட்பாளராகப் போட்டியிடும் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் இம்மாவட்ட வாக்காளர்களின் கவனத்திற்கு வெளியிட்டிருக்கும் கடிதம்

  • காத்தான்குடி ஐக்கிய மக்கள் ஒன்றியம் இன்று (14.08.2015) ஜும்ஆவின்போது வெளியிட்ட பிரசுரம்

    அழ்ழாஹ்வின் பாதையில் ஒன்றுபடுவோம் – 03 இறுதித் தீர்மானத்திற்கு வந்துவிட்டோம்! நீங்களும் தீர்ப்பெழுத முன்வாருங்கள்!! அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றோம். அன்புக்கும், மதிப்புக்கும் உரிய காத்தான்குடி வாழ் உலமாக்களே, கல்விமான்களே, பெரியார்களே, நண்பர்களே, மற்றும் வாக்காளப் பெருமக்களே! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு.

  • ஜனாதிபதி மைத்திரிக்கு மஹிந்தவின் பதில் கடிதம்

    கொழும்பு: நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதில் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேற்று அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தார்.அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றினை மஹிந்த ராஜபக்ஷ இன்று அனுப்பியுள்ளார்.

  • பிரதமர் பதவி இல்லாமல் பாராளுமன்றத்தில் சும்மா உட்கார்ந்திருக்கவா மகிந்த போட்டி…?

    ஏ. அப்துல் ஹமீட், கொழும்பு கொழும்பு: “தேர்தலில் மகிந்த வெற்றிபெற்றாலும், மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது” என, நிர்ப்பந்தத்தின் பிரகாரம் எழுதப்பட்டது என சந்தேகிக்கப்படும் ஜனாதிபதியின் கடிதத்தால், மகிந்த ஆதரவு முஸ்லிம்கள் பலர் நேற்று துள்ளிக்குதித்து, தங்களைத் தாங்களே முஸாபா செய்துகொண்டனர். தான் மீண்டும் ஜனாதிபதியாகி இந்த நாட்டை தன் குடும்பத்தோடு ஆட்சிசெய்து அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே மகிந்த குடும்பம் மீண்டும் தேர்தலில் குதித்திருக்கின்றது.

  • முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து ரணில் இன்று மாபெரும் இறுதிக் கூட்டம்

    கொழும்பு: மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சி பிரதான அமைப்பாளரும் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கலந்துகொள்ளும் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு 10 டவர் மண்டபத்துக்கு முன்பாக இடம்பெறவுள்ளது. முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து இடம்பெரும் இந்த மாபெரும் இறுதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டமானது பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வேட்பாளர்களை ஆதரித்து கலந்துகொள்ளும் 146 பெரிய கூட்டமாகும்.

  • வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் இறுதிப் பிரச்சார விபரங்கள்

    இர்ஷாட் ரஹ்மதுல்லா வன்னி: வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா,மன்னார் மாவட்டங்களில்  இறுதி பிரசார பிரதான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (14) ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு  வவுனியா  சூடுவேந்தபுளவிலும்,மாலை 5.00 மணிக்கு பட்டானிச்சூரிலும்,மாலை 4.00  மணிக்கு மன்னார் சிலாவத் துறையிலும்,மாலை 6.00 மணிக்கு வங்காலையிலும்,இரவு 7.30 க்கு மன்னார் எருக்கலம் பிட்டியிலும் இடம் பெறவுள்ளது.

  • “பிரதேசத்தை ஒற்றுமைப்படுத்துவோம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறும் முன்னாள் பிரதியமைச்சர் உள்ளுக்குள் இருந்து கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றார்” – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: “பிரதேசத்தை ஒற்றுமைப்படுத்துவோம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறும் முன்னாள் பிரதியமைச்சர், உள்ளுக்குள் இருந்து கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றார்” இவ்வாறு சற்று முன்னர்  காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் சதுக்கத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

  • “நாம் அதிகாரத்திற்கு வந்ததும் காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள நூதனசாலையை உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் திருத்தியமைக்கவுள்ளோம்” பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: “நாம் அதிகாரத்திற்கு வந்ததும் காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள நூதனசாலையை உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் திருத்தியமைக்கவுள்ளோம்” இவ்வாறு சற்று முன்னர் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் சதுக்கத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் எம் எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

  • இளம் வேட்பாளர்களை நோக்கி மக்கள் ஆதரவு…

    இனியவன் காத்தான்குடி: எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கின்ற நிலையில், காத்தான்குடியின் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கின்றது. காத்தான்குடி மற்றும் அயல் ஊர்களான பாலமுனை, காங்கேயனோடை ஆகிய பிரதேசங்களில் மக்களின் ஆதரவுகள் இளம் வேட்பாளர்களை நோக்கி திரும்பியிருப்பதை வெளிப்படையாகக் காண முடிகிறது.

  • பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் – காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி வேண்டுகோள்

    – எம்.ஐ.அப்துல் நஸார்  காத்தான்குடி: பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்ததன் பின்னர் அரசியல் கட்சிகளினதும், சுயேற்சைக்குழுக்களினதும் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

←Previous Page
1 … 354 355 356 357 358 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar