Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஈராக் சந்தையில் பயங்கரக் குண்டுத் தாக்குதல்: 60 பேர் உடல் சிதறி மரணம்!

    AF-90 பக்தாத்: ஈராக்கில் மக்கள் கூட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 60 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. .ஈராக்கின் வடமேற்கு பகுதியிலுள்ள ஷியைட் மாகாணத்திலுள்ளது சட்ர் சிட்டி. நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து மிக நெருக்கத்திலுள்ள நகரம் இது.

  • சீன டியான்ஜின் துறைமுக சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து- பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு

    பீஜிங்: சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் 22 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இங்குள்ள எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அடுக்கி வைத்திருந்த

  • NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

    – NFGG காத்தான்குடி: இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் அதன் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களை ஆதரித்து நேற்று இடம்பெற்றது.

  • அமீர் அலி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் (ஒலிப்பதிவு)

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நேற்று (12) புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள லங்கா ஹோட்டலில் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் மகாநாட்டில்

  • “மயில் கட்சிக்கு வாக்குச் சேர்க்கும் வங்குரோத்து அரசியலை மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கைவிடவேண்டும்”

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: எனது நிதியில் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளை காட்டி றிசாட்டின் மயில் கட்சிக்கு வாக்குச் சேர்க்கும் வங்குரோத்து அரசியலை மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கைவிடவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான பைசால் காசீம் தெரிவித்தார்.

  • “ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும்”: நூல் வெளியீட்டு விழாவில் ஹிஸ்புல்லாஹ்

    எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்ததார்.

  • சுனாமியின்போது காணாமற்போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம்

    முல்லைத்தீவு: சுனாமியின் போது 9 வயதில் காணாமல் போன சிறுவன் தற்போது 21 வயது இளைஞராக 11 வருடங்களின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே சுனாமியில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல்போனபோது தரம் 4 இல் கல்வி கற்றுள்ளார்.

  • காத்தான்குடியில் தேர்தல் இலஞ்சமாக விநியோகிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்பொதிகளை பொலீசார் கைப்பற்றினர்

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் நேற்றிரவு (11.08.2015) காத்தான்குடியிலுள்ள ஐ.ம.சு. கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ.ல.மு.கா – ந.தே.மு. கூட்டணி தேர்தல் அலுவலகங்கள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  • ஆயிரக்கணக்கான மகளிர் பங்குகொண்ட NFGGயின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த “மகளிர் மாநாடு”

    NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த “மகளிர் மாநாடு” ஆயிரக்கணக்கான மகளிர் பங்குகொண்டு சிறப்பித்தனர். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பமான மேற்படி மகளிர் மாநாடு NFGGயின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி உறுப்பினர் திருமதி அனீஸா பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

  • பொதுத்தேர்தல்-2015: காத்தான்குடியின் தற்போதய நிலவரம்

    இனியவன் காத்தான்குடி: பொதுத்தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே இருக்கின்ற நிலையில் காத்தான்குடி அரசியல் களம் சூடுபிடித்திருக்கின்றது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி மக்களின் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களும், நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நல்லாட்சியை பாதுகாத்து, மக்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக பொறியியலாளர்களான எம். அப்துர் ரஹ்மான் மற்றும் சிப்லி பாரூக்

  • நிறைவேறாமல் போன சங்காவின் ஆசைகள்

    கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார். உலகக்கிண்ணத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட சங்கக்கரா, தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதால் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

  • பத்துநாள் குழந்தையை கைவிட்டு இளம் தாய் தற்கொலை! கரடியனாறில் சம்பவம்

    ஏறாவூர் அபூ பயாஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதி ,சிவத்த போக்கடியை சேர்ந்த இருபது வயதுடைய தர்மலிங்கம் ஜனனி என்ற இளம் தாய் இன்று (12) அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் பற்றி அறிந்த கரடியனாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ,மரணவிசாரணை மேற்கொள்ள ஏறாவூர் சுற்றுலா நீதிபதி அவர்களின் அனுமதியுடன் பிரதேச மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் அவர்களை அழைத்து வந்தார்கள்.

←Previous Page
1 … 356 357 358 359 360 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar