“பிரதேசத்தை ஒற்றுமைப்படுத்துவோம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறும் முன்னாள் பிரதியமைச்சர் உள்ளுக்குள் இருந்து கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றார்” – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

shibly– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: “பிரதேசத்தை ஒற்றுமைப்படுத்துவோம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறும் முன்னாள் பிரதியமைச்சர், உள்ளுக்குள் இருந்து கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றார்” இவ்வாறு சற்று முன்னர்  காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் சதுக்கத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

அவர் மெலும் தெரிவிக்கையில்,

SLMC+NFGG ஆகிய இரு கட்சிகள் இந்த தேர்தலில் இணைந்து ஒற்றுமையாக செயற்படுகின்றது. அதைப் பொறுத்துக்கொள்ளாத சிலர் பிழையாக பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். நாம் தெளிவாக அந்த விடயங்களைக் கையாளுகின்றோம். பிரதேசத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி மக்களின் தேவைக்கிணங்க செயலாற்ற எண்ணியுள்ளோம்.

shibly

காத்தான்குடி ஊர் வீதிக்கு நடுவில் உள்ள பகுதி இன்னும் கொந்தராத்து கொடுக்கப்பட வில்லை. அவசரப்பட்டு சுவர்களை உடைத்திருந்தால் எமது நிலை என்ன சகோதரர்களே? இது எமது முயற்சியாலேயே சுவர் உடைப்பு தடுக்கப்பட்டது.

இறைவன்தான் யாரை ஆட்சி செய்ய தீர்மானித்தானோ அதன்படி நடக்கும். எமது கையில் ஒன்றும் இல்லை. அவ்வாறு எமது கையில்தான் உள்ளது என நம்பியிருந்தால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வென்றிருப்பார்.

எனவே சிறந்த தலைமைத்துவத்தை தெரிவு செய்ய மரத்திற்கும் 5ம் மற்றும் 2ம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்வதாக ஷிப்லி பாறுக் மேலும் தனதுரையில் தெரிவித்தார்

Published by

Leave a comment