-
ஏ. அப்துல் ஹமீட், கொழும்பு
கொழும்பு: “தேர்தலில் மகிந்த வெற்றிபெற்றாலும், மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது” என, நிர்ப்பந்தத்தின் பிரகாரம் எழுதப்பட்டது என சந்தேகிக்கப்படும் ஜனாதிபதியின் கடிதத்தால், மகிந்த ஆதரவு முஸ்லிம்கள் பலர் நேற்று துள்ளிக்குதித்து, தங்களைத் தாங்களே முஸாபா செய்துகொண்டனர். தான் மீண்டும் ஜனாதிபதியாகி இந்த நாட்டை தன் குடும்பத்தோடு ஆட்சிசெய்து அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே மகிந்த குடும்பம் மீண்டும் தேர்தலில் குதித்திருக்கின்றது.
அதிக வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாகவே, குருநாகல் தொகுதியை மகிந்த தெரிவு செய்ததும், ஹம்பாந்தோட்டையில், மகிந்த போட்டியிட்டால், தனது சகோதரர்கள் மற்றும் தனது புதல்வர்களுக்கான வாக்குகள் கலைக்கப்பட்டு விடும் என்ற நோக்கிலுமே, மகிந்த குருநாகலில் போட்டியிடுகின்றார்.
அதிகூடிய வாக்குகளைப் பெற்று நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலாவது பிரதமர் பதவியைப் பெற வேண்டும் என்ற நப்பாசையில் மகிந்த கூட்டணி முழுமூச்சாக இன்று செயற்படுகிறது.
ஒருவேளை மகிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுக்காது விட்டால், மகிந்த சும்மா பாராளுமன்ற ஆசனத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா? ஓர் முன்னாள் ஜனாதிபதி இந்த நிலையை பாராளுமன்றத்தில் அனுபவிப்பாரா என்பதை மூளையை அடகுவைத்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தனது கட்சி வெற்றிபெற்றால், பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஊடாக கலைக்கவும், ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவும், மகிந்த கூட்டணிக்கு அரசியல் பின் புலங்கள் இருக்கின்றன.
இதனால்தான் சுதந்திரக் கட்சியில் இருக்கும் மகிந்தவின் விசுவாசிகள் இன்றைய நிமிடம் வரைக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கு அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.
இந்த அழுத்தங்களில் இருந்து இந்நாடும், இந்த நாட்டு ஜனாதிபதியும், இந்நாட்டு மக்களும் தப்பிப்பிளைக்க வேண்டுமானால், மகிந்த ஆதரவுக் கட்சிகளும், கூட்டணிகளும், மகிந்தவுக்கு மறைமுகமாக வாக்குகளைத் தேடும் வேட்பாளர்களும் தோல்வியடைய வேண்டும்.


Leave a comment