பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் – காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி வேண்டுகோள்

speaker– எம்.ஐ.அப்துல் நஸார் 
காத்தான்குடி: பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்ததன் பின்னர் அரசியல் கட்சிகளினதும், சுயேற்சைக்குழுக்களினதும் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுளுக்கு அமைவாக அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். 
 பள்ளிவாயல்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என பள்ளிவாயல் நிருவாகிகளை கேட்டுகொள்கின்றேன். 
பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்களின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகும், எனவும் காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.

Published by

Leave a comment