கொழும்பு: 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதாகவும். அமைதியான காலப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்ட என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பிரதான அரசியல் கட்சிகள் தமது இறுதிப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தயாராகிவருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு மருதானை டவர் மண்டபத்திற்கு எதிரே நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் குருநாகல் மாளிகாப்பிட்டிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடைப பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
Published by

Leave a comment