இளம் வேட்பாளர்களை நோக்கி மக்கள் ஆதரவு…

  • இனியவன்

ballot_box1[1]காத்தான்குடி: எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கின்ற நிலையில், காத்தான்குடியின் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கின்றது. காத்தான்குடி மற்றும் அயல் ஊர்களான பாலமுனை, காங்கேயனோடை ஆகிய பிரதேசங்களில் மக்களின் ஆதரவுகள் இளம் வேட்பாளர்களை நோக்கி திரும்பியிருப்பதை வெளிப்படையாகக் காண முடிகிறது.

“எமது முடிவுகள் இன்று எடுத்ததவை அல்ல, கடந்த ஜனவரி மாதமே தாங்கள் எடுத்துவிட்டோம்” என்பதாகவும் அதிகமான வாக்காளர்கள் தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

தேர்தல் கூட்டங்களிலோ, வெளிப்படையான அரசியல் செயல்பாடுகளிலோ ஈடுபடாமல் இப்பிரதேங்களில் மாத்திரம் சுமார் 5000 வாக்குகள் காணப்படுகின்றன எனவும், இத்தகைய வாக்குகளில் அதிகமானவை தேர்தல் தினத்தன்று இளம் வேட்பாளர்களை சென்றடையும் எனவும் களநிலவரம் கூறுகிறது.

Published by

Leave a comment