“நாம் அதிகாரத்திற்கு வந்ததும் காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள நூதனசாலையை உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் திருத்தியமைக்கவுள்ளோம்” பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

  • எம்.எச்.எம்.அன்வர்

rahumanகாத்தான்குடி: “நாம் அதிகாரத்திற்கு வந்ததும் காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள நூதனசாலையை உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் திருத்தியமைக்கவுள்ளோம்” இவ்வாறு சற்று முன்னர் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் சதுக்கத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் எம் எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொருளாதார அபிருத்தி பிரதியமைச்சரினால் அமைக்கப்பட்ட நூதனசாலை முற்றிலும் உலமாக்களின் கருத்துக்களை கேட்காது அமைத்துவிட்டு, தற்போது வெளிநாட்டு உலமாக்கள் அல்லது கொழும்பு உலமாக்களைக்கொண்டு வந்து பத்வா கேட்டுவிட்டு சிலையை அகற்றுவேன் எனத்தெரிவிக்கிறார்.

இது நடக்க முடியாத ஒரு செயலாகும். ஏனெனில் அங்கே இருக்கும் பொருட்களை அகற்ற முடியாது. இன்ஷா அல்லஹ் நாம் அதிகாரத்திற்கு வந்ததும் உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் அவற்றினை திருத்தியமைப்போம்.

rahuman

நேற்று நடாத்திய பெண்கள் மாநாடு வரலாறு காணாத பெரு வெற்றியாக மாறியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கூட இதற்கு முன்னர் நடாத்திய பெண்கள் மாநாடு இவ்வாறான சனத்திரழ் இல்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் உறுதியளித்தள்ளார்.

முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் அவ்வாறான ஒரு மாநாட்டுக்கு சமூகம் தந்ததையிட்டு அல்ஹம்துலில்லாஹ். அவர்களை விழிப்படையச் செய்திருக்கிறோம். அதில் கிட்டத்தட்ட 5000 பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எங்களுக்காக பெண்கள் வீடு வீடாகச் சென்றும் கைக்குழந்தையோடு சென்றும் பிரச்சாரம் செய்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு எந்த கூலியும் கொடுப்பதில்லை. இந்த புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏனைய அரசியல்வாதிகளுக்கும் ஏற்படுத்திக்காட்டியிருக்கிறோம்.

நாங்கள்தான் பிழையானவர்களை தெரிவுசெய்கிறோம். பின்னர்தான் சிந்தனை செய்கிறோம்.

ஹிஸ்புல்லா வானத்தில் இருந்துவந்தவரா அல்லது மன்னர் பரம்பரையா எனக் கேட்க விரும்புகிறேன். நாங்கள் தான் பிழையானவர்களை தெரிவு செய்தோம். சகோதரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

வருகின்ற பாராளுமன்ரத்தில் ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்யுங்கள். எமது மானம் மரியாதையை பாதுகாக்க உரிமையை பாதுகாக்க இந்த பிரதேசத்தை பாதுகாக்க சிறந்த தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள எதிர்வரும் 18ம் திகதி மகிழ்ச்சியான ஒரு தேர்தல் முடிவாக அமைய மரத்திற்கும் 2ம் மற்றும் 5ம்இலக்கத்திற்கும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக தனதுரையில் பொறியியலாளர் எம் எம். அப்துர்ரஹ்மான மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment