Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஆட்சியைப் பிடிக்க சீனாவிடம் பணம் கேட்கும் மகிந்த! மக்களே எச்சரிக்கை!!

    கொழும்பு: எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஐதேக மற்றும் ஐமசுமு இடையேயான நேருக்குநேர் மோதலில், தனது முன்னணிக்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஐதேகவில் தெரிவாகும் உறுப்பினர்களை பணத்திற்கு கொள்வனவு செய்ய மஹிந்த ராஜபக்ச தனது சிரேஸ்ட இராஜதந்திரிகள் ஊடாக சீன அரசாங்கத்திடம் பணம் கேட்டுள்ளார்.

  • தாஜூதீன் கொலை: ரோகிதவின் காதலி தெரிவித்த திடுக்கிடும் தகவல்கள்

    கொழும்பு: மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜுதீனின் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும் ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.

  • “இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைமையகமாக, பாதுகாக்கின்ற கேடயமாக இந்த மண் மாற வேண்டும்”: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

    – எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைமையகமாக, பாதுகாக்கின்ற கேடயமாக இந்த மண் மாற வேண்டும். என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் முழுமையாக (ஒடியோ)

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று 14 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி கயா பேக்கரி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்,

  • தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் அமைதி காக்குமாறு அனைவரிடமும் பிரதமர் கோரிக்கை

    –  எம்.ஐ. அப்துல் நஸார் காலி: தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் அமைதி காக்குமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (14) காலி சமனல விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

  • ‘துல்கஃதா’ மாத தலைப்பிறை பார்த்தல்

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கொழும்பு: இன்று (15-ஆகஸ்ட்) சனிக்கிழமை ஹிஜ்ரி-1436 இன் ‘துல்கஃதா’ மாத தலைப்பிறை பார்க்கும் நாளாகும். * பிறை தென்படும் நேரம் மாலை 06.25. * நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்பட்டால் உடனடியாக 0112432110 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கேட்டுக்கொள்கின்றது. தகவல்: மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)

  • “தாஜூதீனின் மரணத்துக்கு யோசித்த பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை வாகனமே சென்றது”

    கொழும்பு: வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார்.  அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதுபவர்கள் கடத்தப்பட்டு மின்னேரியா முகாமில் இடப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

  • அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகும் நேரம்: மக்கள் அவதானம்

    – ஏ. சுபைர் காத்தான்குடி: தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. பெரும்பாலான மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்று ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர். ஆனால் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி, தனது ஆதரவுகைள கொஞ்சமாவது அதிகரித்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் பேராசை கொள்வர்.

  • காத்தான்குடியில் இடம்பெற்ற இறுதித் தேர்தல் மேடைத் துளிகள்…

    இனியவன் காத்தான்குடி: நேற்றிரவு 14-08-2015 நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வருகின்றன. இந்தவகையில், காத்தான்குடியில் இரு துருவங்களாக இப்பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மற்றம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் + நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்த இறுதித் தேர்தல் பிரச்சார மேடைகள் வழமைபோன்று முழங்கின.

  • சியாட், நஸார் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரஹ்மானுக்கு ஆதரவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் மற்றும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நஸார் (அல்பா நஸார்) உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் 2ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும், நல்லாட்சிக்கான

  • பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க, விஸ்வ வர்ணபால நியமனம்

    கொழும்பு: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • சுசில் மற்றும் அநுரவை நீதிமன்றம் பதவி நீக்கியது

    கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாபா ஆகியோரை அவர்களது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. அக்கட்சிகளின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கமையவும் கட்சியின் யாப்பிற்கமைய இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 353 354 355 356 357 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar