Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வக்காலத்து வாங்குவதால் சரித்திரம் அழிந்துவிடாது!

    காத்தான்குடி: காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஹிஸ்புல்லாஹ் தரப்பினரின் அடிதடி ஆர்ப்பாட்டத்தை பல கோணங்களிலும் திசைதிருப்ப ஹிஸ்புல்லாஹ் தரப்பால் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவர்களது அனைத்து முயற்சிகளும் பலத்த தோல்விகளில் முடிவடைந்திருக்கின்றன.

  • தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கக் கூடாது: சோபித தேரர்

    கொழும்பு: நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தோல்வியடைந்திருந்த வேட்பாளர்களை, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கண்டித்திருக்கிறார். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய சோபித தேரர், தேசியப் பட்டியலில் புத்திஜீவிகளுக்கும் கல்விமான்களுக்குமே இடம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

  • வன்முறைக் கலாசாரத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்-தாருல் அதர் அத்தஅவிய்யா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் பேட்டியிட்டு சுமார் 127 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற பிரவேசத்தை இழந்த முன்னாள் பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு நேற்று (21) வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற நியமனம் வழங்கப்பட்ட செய்தி வெளியானதிலிருந்து ஆதரவாளர்களில் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஊர்வலமாகச்…

  • காத்தான்குடியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிஇலங்கை நாட்டில் நல்லாட்சிக்கான அத்திவாரம் இடப்பட்டு வரலாறு காணாத வகையில் மிக அமைதியான ஒரு பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு முடிவடைந்த நிலையில் தொடர்ந்தும் அரசியலை அடிப்படையாகக்கொண்ட ஒரு வன்முறைச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை 21.08.2015ம் திகதி மாலை காத்தான்குடியில் இடம்பெற்றதை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வன்மையாகக் கண்டிப்பதுடன், இவ்வன்முறைச்சம்பவத்தில் அநியாயமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர்களுக்கு ஜம்இய்யா தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

  • SLMC தலைவர் றவூப் ஹக்கீம் NFGG காரியாலயத்திற்கு விஜயம்

    நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் சற்றுமுன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயத்திற்கு வருகை தந்தார். காத்தான்குடியில் நேற்று ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்கு மட்டக்களப்புக்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் ஒரு கட்டமாகவே இந்த விஜயம் இடம்பெற்றது.

  • காத்தான்குடியில் நடந்தேறிய கலவரமும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பங்கும்

    டோஹா: சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கத்துவம் அறிவித்ததை தொடர்ந்து எமதூரான காத்தான்குடியில் இடம்பெற்ற கலவரம் பொதுவாக கண்டிக்கத்தக்கது இதை எந்த நபரும், அல்லது கட்சிகள், இயக்கங்கள் ஆதரிக்கவில்லை தமது கண்டனங்களையும் வெளியிட்டனர்.

  • காத்தான்குடி சம்பவம் கண்டிக்கப்படவேண்டியவை

    காத்தான்குடி: காத்தான்குடி சம்பவம் கண்டிக்கப்படவேண்டியவை என ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் VTA முபாறக்  JP தெரிவித்தார். 

  • ஹிஸ்புள்ளாவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்ததை வன்மையாக கண்டிக்கின்றேன்

    காத்தான்குடி: தேசியப்பட்டில் அறிவிப்பை தொடர்ந்து நேற்று காத்தான்குடியில் ஹிஸ்புள்ளாவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்ததை வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் STM தௌபீக் ஹாஜியார் தெரிவித்தார்.

  • எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கி வரும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயல் முன்றலில் நடத்தினர்.

  • நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை

    அபூ அல்தாப் காத்தான்குடி: நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. வேண்டு மென்றே திட்டமிடப்பட்டு எம்மீது சேறுபூசுகின்றனர். இவ்வாறு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்தார்.

  • கவனயீர்ப்புப் போராட்டம்

    NFGG கொழும்பு: நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கள் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.

  • “காத்தான்குடியில் கற்பிணிப்பெண் தாக்கப்பட்டமை மனித நேயத்திற்கே அவமானமான நிலை”: கபே

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஹிஸ்புல்லா தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து, அவரது ஆட்சி பிரதேசமான காத்தான்குடியில் நேற்று இரவு மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 345 346 347 348 349 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar