காத்தான்குடி: காத்தான்குடி சம்பவம் கண்டிக்கப்படவேண்டியவை என ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் VTA முபாறக் JP தெரிவித்தார்.
நடந்து முடிந்த பாராளமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய முன்னால் பிரதியமைச்சர் ஆடுயுஆ ஹிஸ்புள்ளாவுக்கு தேசியப்பட்டியல் பிரதி நிதித்துவம் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து ஹிஸ்புள்ளாவின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி தங்களது மகிழ்சியைக் கொண்டாடியதுடன் ஒரு குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாகச் சென்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்குள் பட்டாசுகளை வீசி அட்டகாசம் புரிந்ததுடன் அல்லாஹூவின் இல்லமான தேசிய தஹ்வீத் ஜமாத் பள்ளிவாயலுக்குள்ளும் பட்டாசுகளை வீசி அதற்குள் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியதுடன் கர்ப்பினி தாய் ஒருவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர் இதனால் சுமார் 11க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் பலர் கவளைக்கிடமான நிலையில் வைத்தியசாலையிலும் அனுக்கப்பட்டடுள்ளனர்.
இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
கடந்த 25வருடங்களாக இடம்பெற்ற இவ்வாரான காடைத்தனமான செயற்பாடுகளே ஹிஸ்புள்ளாவை தோல்வியடையச் செய்தது என்பதை எவரும் மறுக்க முடியாது இச்சம்பவம் ஜனநாயகத்தை குழிதோன்டி புதைத்துள்ளதுடன் நாட்டில் கஸ்டப்பட்டு உருவாக்கிய நல்லாட்சியை நளிவடையச் செய்துள்ளதாக சமாதானத்தை விரும்புவோர் பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.
இவ்வாறு குறித்த சம்பவத்தை நாட்டிலுள்ள சமாதான விரும்பிகள் பகிரங்கமாக கண்டித்துள்ள அதே வேலை காத்தான்குடியின் இரு கண்கள் என வர்னிக்கப்படும் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் ஜம்மியத்துல் உலமா போன்றவைகள் இதுவரைக்கும் எதுவித கண்டன அறிக்கையையும் வெளியிடாது மௌனம் சாதிப்பதானது காடைத்தன அரசியலுக்கு வழுசேர்ப்பதாகவே அமைந்துள்ளது கடந்த காலங்களில் சம்மேளனத் தலைவர்கள் ஒரு தலைப்பட்சமாக கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதற்கு சான்றாக கடந்த சம்மேளனத்தலைவர் சுபையிர் சீசீ கட்சி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன் காத்தான்குடி நகர சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது அதே போன்று தற்போதைய தலைவர் றஊப் ஏ மஜீட் இம்முறை பகிரங்கமாக கட்சி அரசியல் செய்து வந்தார் இவ்வாரன சந்தர்ப்பத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டும் கானாதுபோல் பாசங்கு செய்வதானது காத்தான்குடி சம்மேளனம் தனது புனிதத்தை தன்மையை இழந்து விட்டது எனவும் தெரிவித்தார்.
Leave a comment