காத்தான்குடியில் நடந்தேறிய கலவரமும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பங்கும்

Rahuman டோஹா: சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கத்துவம் அறிவித்ததை தொடர்ந்து எமதூரான காத்தான்குடியில் இடம்பெற்ற கலவரம் பொதுவாக கண்டிக்கத்தக்கது இதை எந்த நபரும், அல்லது கட்சிகள், இயக்கங்கள் ஆதரிக்கவில்லை தமது கண்டனங்களையும் வெளியிட்டனர்.

இந்த கலவரத்தின் விளைவுகளை வைத்துத்தான் பலரது விமர்சனங்களையும் கருத்துக்களையும் நாம் காணக்கூடியதாக இருந்தது. இது ஒரு நியாயமான அணுகுமுறை இல்லை எந்த ஒரு பிரச்சனைக்கோ அல்லது கலவரத்துக்கோ எந்த ஒரு நீதிமன்றத்திலும் விளைவை அடிப்படையாக கொண்டு தீர்ப்பு சொல்லப்படுவதில்லை. தீர விசாரித்து இதற்கு மூலக்காரணம் அதாவது யாரால் இப்பிரச்சினை ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அங்கிருந்துதான் தீர்ப்புகள் எழுதப்படவேண்டும் இதைதான் ஒவ்வொரு நடுநிலையான சிந்தனையாளனும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும்.

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் மிக சொற்ப வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டபோது அவர்களுடைய ஆதரவாளர்கள் மிக மனவேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். இந்தத்தருணத்தை பயன்படுத்தி ஆதரவாளர்களின் உணர்சிகளை தூண்டி ஒரு மிகப்பெரிய பழிவாங்கலை, கலவரத்தை சகோதரர் ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்களினால் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக மக்களின் தீர்ப்பையும், ஜனநாயகத்தையும் மதித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர் யாருமே வெளியில் வரவில்லை சமூக வலைதளங்களிலும் தமது அதிருப்தியை கணிசமானவர்கள் வெளிப்படுத்தவும் இல்லை. இதற்கு ஆதாரமான, மக்கள் நடமாட்டம் அற்ற காத்தான்குடி பிராதான வீதி புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டதை நாம் கண்டோம்.

Rahuman

கடந்த 21.08.2015 வெள்ளியன்று சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தேசியப்பட்டியல் உத்தியோக பூர்வ அறிவிப்பு அவரின் ஆதரவாளர்களுக்கு எல்லைகடந்த மகிழ்ச்சியை தந்த அதே நேரத்தில் தம் சக ஆதரவாளர்களுடன் பரிமாறிக்கொள்ள வீதிக்கு வந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடினர். வீதிகளில் மகிழ்ச்சி கோசம் எழுப்பி சென்றனர் இதை பொறுக்கமுடியாத சில நயவஞ்சகர்களின் செயல்களால் அவர்கள் துன்புறுத்தி கேலி செய்யப்படும்போது அது கலவரமாக மாறியுள்ளதைத்தான் நாம் இரண்டு நாட்களாக அவதானித்தோம்.

இந்த கலவரத்தின் பெரும் அநீதியாக நாம் காண்பது தௌஹீது பள்ளிக்குள் சென்று தொழுது கொண்டிருக்கும் நேரத்தில் அந்த மக்களை இடையூறு செய்து அவர்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்து சில தவ்ஹீத் சகோதரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த தீய செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விசாரனைக்குட்படுத்த வேண்டும். ஆனால் தவ்ஹீத் சகோதரர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் அதாவது எல்லா இயக்கங்களிலும் சில நயவஞ்சகர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

இந்த கலவரத்தில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பங்கு என்ன என்பதைத்தான் நாம் இங்கு அவதானிக்க வேண்டும். சம்பவம் நடந்த அன்று அவர் காத்தான்குடியில் இல்லை, அவரின் தலைமையில் இந்த வெற்றி ஊர்வலம் நடைபெறவில்லை, ஊர்வலம் செய்யுமாறு அவர் அறிவுறுத்தவும் இல்லை.

நாம் விரும்பும் அல்லது பின்பற்றும் ஒரு நாடு அல்லது ஒரு தலைவன் அல்லது ஒரு விளையாட்டுப்போட்டி வெற்றியீட்டும்போது அதன் ஆதரவாளர்களால் கொண்டாடப்படுவது காலம் காலமாய் நடக்கின்ற ஒரு விடயம் இதை எந்த நீதிமன்றமும் தவறு என்று சொல்வதில்லை இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மக்காவை கைபற்றும் நோக்கில் நபியவர்கள் மக்காவிட்குள் நுழைந்தபோது எந்த கலவரமும் இல்லாமல் மக்காவை கைப்பற்றினார்கள் அந்த நேரத்தில் மக்கா வாசிகளுக்கு நபியவர்கள் இட்ட கட்டளை “தங்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு மாத்திரம் உயிருக்கு உத்தரவாதம் உண்டு” என்பது ஆனால் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. அந்த வெற்றியை மக்காவில் “யவ்முல் மல்கமா” என்று கோசம் போட்டு வந்த நபியவர்களின் கூட்டத்தினர் “யவ்முல் மர்ஹமா” என்ற கோசத்தை எழுப்பி கொண்டாடினர்.

இந்த வரலாறை முன்மாதிரியாக கொண்டு வெற்றிக்களிப்பில் உள்ளவர்களை தடுக்காது, துன்புறுத்தாது சகோதரர் ஹிஸ்புல்லாஹ்விட்கு எதிராக வாக்களித்தவர்கள் வீட்டில் இருந்திருந்தால் அவர்கள் ஒரு அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரத்தில் வெற்றிக்களிப்பை முடித்து ஒரு சாந்த நிலை ஏற்பட்டு இருக்கும் ஆனால் சில நயவஞ்சகர்கள் அதை விரும்பவில்லை.
கலவரம் ஏற்பட்டதற்கும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமும் இல்லை என்று தெரிந்தும் சி.மு.கா வேட்பாளர் சகோதரர் சிப்லி பாரூக் அவர்கள் ஊடகத்துக்கு வெளியிட்ட அறிக்கை சில உண்மைகளை உணர்த்தியது அதாவது
ஹிஸ்புல்லாஹ் அவர்களை தோற்கடிக்கவே இந்த தேர்தல் களம் என்பதை, அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தோல்வி முடிவு வரும்போது யாரும் பட்டாசு கொளுத்தவேண்டாம் என்று வேண்டிக்கொண்டாராம் அவரே சொன்னார் அத்தோடு
ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தேசியப்பட்டியலை பறிமுதல் செய்ய வேண்டும் என்று எந்த வித சம்பந்தமும் இல்லாமல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

மற்றுமொறு காத்தான்குடி சி.மு.கா வேட்பாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஹிஸ்ல்லாஹ்விட்கு எதிராக போராட்டம் நடத்தினார் அவரும் அதே காழ்புனர்சியை வெளிப்படுத்தி, தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு எப்படி தேசியப்பட்டியலில் இடம் கொடுக்கமுடியும் என்பதை கேள்வியாக வைத்தார். (தேசியப்பட்டியலை வேண்டி காத்தான்குடியின் சில பிரமுகர்களை அழைத்துக்கொண்டு மு. கா. தலைவரின் வீட்டுக்கு கடந்தவாரம் இவர் சென்றிருந்தார்) அவரும் தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை ஹிஸ்புல்லாஹ்மீது வைத்திருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.

இறுதியாக நாம் காத்தான்குடியின் காவல்துறையினரை வேண்டிக்கொள்வது இந்த கலவரத்தை தீரவிசாரிக்க வேண்டும் அதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு தகுந்த தண்டனையை அளிக்க வேண்டும். என்பதை வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு…….

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அரசியல் அனுபவம், ஆளுமை, அறிவுத்திறமை என்பதை கருத்தில்கொண்டு இந்த தேசியப்பட்டியலில் இடம் அளித்துள்ளீர்கள் அதற்காக காத்தான்குடி மக்கள் சார்பாக எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் அமைக்க இருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு இன மத வேறுபாடின்றி அமைதிமிக்க நாட்டை கட்டி எழுப்ப எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம் என்ற உறுதியையும் நாங்கள் அளிக்கிறோம்.

காத்தான்குடி அப்துல் ரகுமான்
கத்தாரில் இருந்து

Published by

Leave a comment