SLMC தலைவர் றவூப் ஹக்கீம் NFGG காரியாலயத்திற்கு விஜயம்

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

hakeem kattankudyகாத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் சற்றுமுன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயத்திற்கு வருகை தந்தார். காத்தான்குடியில் நேற்று ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்கு மட்டக்களப்புக்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் ஒரு கட்டமாகவே இந்த விஜயம் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய செயலாளர் MACM.ஜவாகிர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் றவூப் ஹக்கேம் உரையாற்றினார்.

hakeem kattankudy

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னையின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயாலயத்தில் திரண்டு இருந்தனர்.

nfgg

Published by

Leave a comment