வக்காலத்து வாங்குவதால் சரித்திரம் அழிந்துவிடாது!

hizbullah violenceகாத்தான்குடி: காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஹிஸ்புல்லாஹ் தரப்பினரின் அடிதடி ஆர்ப்பாட்டத்தை பல கோணங்களிலும் திசைதிருப்ப ஹிஸ்புல்லாஹ் தரப்பால் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவர்களது அனைத்து முயற்சிகளும் பலத்த தோல்விகளில் முடிவடைந்திருக்கின்றன.

சமூக வலைத்தளங்கள்:

மஹிந்த ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்றுவதற்கு எவ்வாறு சமூக வலைத்தளங்கள் இன்றியமையாத ஊடகங்களாக அமைந்தனவோ, அதேபோன்றுதான் ஹிஸ்புல்லாஹ் தரப்பால் ஏற்படுத்தப்பட்ட இவ்ஆர்ப்பாட்டத்தின் உண்மைத் தன்மையை சமூகவலைத்தளம் எடுத்துக்காட்டுகின்றது.

ஆர்ப்பாட்டம், ஆதரவாளர்களின் அநாகரிகமான செயற்பாடுகள், தாக்குதல்கள் அனைத்தும் கச்சிதமாக நவீன காலத்து இலத்திரனியல் கருவிகளுக்குள் வசமாகச் சிக்கிக்கொண்டதால், வேறுவழியில்லாமல் அறிக்கைகளாலும், கட்டுரைகளாலும் ஹிஸ்புல்லாஹ் தரப்பின் அநியாயங்களை மறைக்க அவரது தீவிர ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கலவரங்களும் போராட்டங்களும்:

காத்தான்குடியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் வன்முறைகள் அனைத்தும் காலங்கள் மாறினாலும், சரித்திரங்களில் இருந்து மாறாது.

  • யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மர்சூக் என்பவரை துப்பாக்கி முணையில் மிரட்டியதை மறக்க முடியாது (2000)
  • “ஈமானியப் போராட்டம்” என்ற அடிப்படையில் காத்தான்குடியில் ஏற்பட்ட இருதரப்பு அசம்பாவிதங்களும், கொலைகளும் மறக்க முடியாதவை. (2004-2006)
  • அரசியல் பழிவாங்களில் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் வீடு, அவரது வாகனத்தை துப்பாக்கி முனையில் தாக்கியதை மறக்க முடியாது. (2006-07)
  • மைத்திரிபால சிறிசேனாவின் காத்தான்குடி தேர்தல் அலுவலகத்தை காடையர்களைக் கொண்டு அடித்து நொருக்கிய சம்பவங்களை மறக்க முடியாது. (2015)
  • மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்த காத்தான்குடி ஆதரவாளர்களின் வீடுகளுக்கு குண்டு வீசியதை மறக்க முடியாது. (2015)

hizbullah supportes

எனவே வெள்ளிக்கிழமை கலவரங்களுக்கு எப்படித்தான் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் வக்காலத்து வாங்கினாலும், வரலாறுகள் என்றும் மறக்காது. அதன் சம்பவங்கள் காலம் மாறினாலும் மக்கள் மனங்களில் இருந்து, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இருந்து என்றும் அழியாது.

எனவே வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊர்வலம் திட்டமிட்ட ஓர் கலவரமேயன்றி வேறில்லை.

இதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் பாதிக்கப்பட்டவர்களை தங்கள் இதயங்களில் இருந்து அகற்றிவிட்டு உங்கள் பணிகளைத் தொடருங்கள்.

  • எஸ்.எச். இர்சாத், காத்தான்குடி

Published by

Leave a comment