- அபூ அல்தாப்
காத்தான்குடி: நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. வேண்டு மென்றே திட்டமிடப்பட்டு எம்மீது சேறுபூசுகின்றனர். இவ்வாறு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பட்டாசு கொழுத்தி வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட மக்களை வேண்டுமென்றே நல்லாட்சி சகோதர்கள் திட்டமிட்டு ஹிஸ்புல்லாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக நேற்றைய தினம் வன்முறையில் ஈடுபட்டனர்.
எங்கள் ஆதரவு சகோதரர் ஒருவரை என் டி ஜே பள்ளியில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பொலிசார் சமூகமளித்து அந்நபரை மீட்டு வந்தனர்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் பதவியினை காழ்ப்புணர்வின் காரணமாகவும் ஹிஸ்புல்லாவைத்தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அவரை கொச்சைப்படுத்தி பதவியிலிருந்து இறக்கி ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இவ்வாறான செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
கொழும்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் தற்போது ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பற்றி ஏனைய சமூகங்கள் எம்மைப்பற்றி கேவலமாக சித்தரிக்கின்றன.
தேசியப்பட்டியல் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் வீதியில் இறங்கிப்போராடுவர். ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவியினை பறிக்க களமிறங்கியுள்ளனர்.
இவர்களின் நல்லாட்சி இதுதானா எனக்கேட்க விரும்புகிறேன்.
றவூப் ஹக்கீம் வீட்டில் தேசியப்பட்டியல் கேட்டு படையெடுக்கும் இவர்கள் 25 வருடம் அரசியல் அனுபவமுள்ள ஒரு முன்மாதிரியான தலைவர் ஹிஸ்புல்லாவை தோட்கடித்து சேறுபூச எத்தனிக்கின்றனர். இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என கேட்கவிரும்புகின்றேன். இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.
Leave a comment