காத்தான்குடி: தேசியப்பட்டில் அறிவிப்பை தொடர்ந்து நேற்று காத்தான்குடியில் ஹிஸ்புள்ளாவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்ததை வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் STM தௌபீக் ஹாஜியார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நடந்து முடிந்த பாராளமன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாவுக்கு தேசியப்பட்டியலில் பாராளமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவுள்ளதாக விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பாட்டாசு கொழுத்தி ஊர்வலமாகச் சென்று முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடாத்தயதுடன் பள்ளிவாலுக்குள் புகுந்து அங்கும் தாக்குதல் நடாத்தியதோடு ஒரு கர்ப்பினி தாய் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்ட விடயத்தினை வன்மையாக கண்டிக்கின்றேன்.
குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தினை எந்தவொரு ஜனநாயகத்தை விரும்புவோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஏனைய ஜனநாயகத்தை நேசிக்கும் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையூறு இன்றி ஒரு வரையரைக்குள் இருக்க வேண்டுமே அன்றி ஏனைய கட்சியின் ஆதரவாளர்களை தாக்குகின்ற வெற்றிக் கொண்டாட்டமாகவும் காத்தான்குடி மக்களை பீதியடைய வைக்கின்ற வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது எனவும் எதிர் காலத்தில் இவ்வாரான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாமல் காத்தான்குடி தலைமைகள் பொறுப்புனர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Leave a comment