Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தேசிய அரசாங்கம் குறித்து இறுதி இணக்கப்பாடு

    கொழும்பு: தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (தேசியப் பட்டியல்) மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். மலிக் சமரவீரவின் கையெழுத்திடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்று இன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புதிய அமைச்சரவை 2ம் திகதி சத்தியப்பிரமாணம்

    கொழும்பு: புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக செப்டம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.

  • ஐ.எஸ். தீவிரவாதத்தின் உச்சம்: குழந்தை ஒன்று கரடி பொம்மையின் தலையை துண்டிக்கும் காணொளி

    டமஸ்கஸ்: ஐஎஸ் கொடிக்கு முன்பு நின்று கொண்டு 3 வயது குழந்தை ஒன்று கரடி பொம்மையின் தலையை துண்டிக்கும் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் பலாத்தாரம் செய்கிறார்கள். அவர்களை பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் பாலியல் அடிமை சந்தையில் வேறு விற்பனை செய்கிறார்கள்.6 முதல் 9 வயது வரை உள்ள சிறுமிகளைக் கூட…

  • முக்கிய அமைச்சுக்களை கோருகிறது சுதந்திரக் கட்சி

    கொழும்பு: அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தொடர்ந்தும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நிதி மற்றும் சக்திவளம், சமுர்த்தி போன்ற துறைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக மஹிந்த தெரிவிப்பு

    கொழும்பு: அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது இரண்டு சகோதரிகளின் ஆலோசனையின் பேரிலேயே தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • தோல்வியடைந்தவர்களுக்கு ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்: நீதிமன்றில் மனுத் தாக்கல்

    கொழும்பு: இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்ற சிலர் இணைக்கப்பட்டமைக்கு சவால் விடுக்கும் வகையில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகஜன எக்சத் பெரமுனவின் சோமவீர சந்திரசிறியால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

  • தேர்தலுக்குப் பின்னரான NFGGயின் மக்கள் சந்திப்பு

    நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விஷேட மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (25.08.2015) கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.

  • அட்டாளைச்சேனைக்கு வழங்கயிருக்கும் தேசியப் பட்டியல் யாருக்கு????

    – ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத்   அட்டாளைச்சேனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் இம்முறை அட்டாளைச்சேனைக்கு வழங்கயிருக்கும் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் நிறைவேற்றப்பட்ட ஏகமான தீர்மான கடிதம் ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு குழுவும் ,

  • “எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குத் தேவையில்லை”: மஹிந்த

    கொழும்பு:  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • புத்தளத்திற்கு தேசியப்பட்டில் ஆசனம் கிடைத்தது பெரும் வரப்பிரசாதமே

    ரஸீன் ரஸ்மின் புத்தளம்: பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் சந்தர்ப்பம் வழங்க மாட்டாது என தேசிய அரசியலில் பேசப்பட்டு வந்ததை யாவரும் அறியாமலிருந்திருக்க மாட்டீர்கள். ஆனால், தேர்தல் முடிந்த நிலையில், தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

  • அமைச்சுப்பதவி இல்லை! அதிருப்தியில் சொந்த ஊருக்குத் திரும்பிய முஸ்லிம் அரசியல்வாதிகள்!!

    AF-90 கொழும்பு: பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் சென்றுவிட்ட நிலையில், தேசியப் பட்டியல் விலை பேசப்பட்டது. அதன்படி தேசியப்பட்டியல் தேர்தலில் தோற்றவர்களுக்கும், ஏனையோருக்கும் இருதரப்பும் வழங்கி நிறைவடைந்த நிலையில், மீண்டும் தமக்கு இந்த அமைச்சுதான் தரவேண்டும் என்ற விலை பேசல் இடம்பெற்று வந்தது.

  • நிரிக்கதிக்குள்ளாகும் அமைச்சரவை நியமனம்! புதிய அணிகள் உருவாகும் நிலை!!

    அபூ அஸ்ஜத் கொழும்பு: நடை பெற்று முடிந்த 8 வது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.பாராளுமன்றத்;துக் தெரிவான உறுப்பினர்களில் பலர் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கைக்கு மேல் அறிக்கைகளை விட்டுக்கொண்டுவருகின்ற நிலையில் இன்னும் இரு தினங்களுக்கு அமைச்சரவை நியமனம் நீட்டப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

←Previous Page
1 … 343 344 345 346 347 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar