Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றி “பத்கன் முபீனா” (மகத்தான வெற்றி)யாகும்: மௌலவி எஸ்.எம்.அலியார் தெரிவிப்பு

    ஏ.எல்.டீன்பைரூஸ், FM. பர்ஹான் காத்தான்குடி: புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக இன்று சத்தியப்பிரமானம் செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜம்ஆ பள்ளிவாயலில் 09.09.2015 புதன்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஸலாத்துல் ஷூக்குர் தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

  • காத்தான்குடியில் இனிப்புக் கொண்டாட்டம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதையடுத்து அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று 9 புதன்கிழமை ஈடுபட்டனர்.

  • கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என இன்று தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்ட கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

  • புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக – ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நியமனம்

    புதிய இராஜாங்க அமைச்சர்கள் 1. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் – ஏ.எச்.எம். பௌஸி 2. நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் – டிலான் பெரோ 3. காணி இராஜாங்க அமைச்சு – டி.பி. ஏகநாயக

  • சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கிறது!

    கொழும்பு: இறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ கிராம் சீனிக்கான வரி 12 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சீனியின் சந்தை விலைகளில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும் 3 அமைச்சர்கள் நியமனம்

    கொழும்பு: எட்டாவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். மலிக் சமரவிக்கிரம அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சராகவும், விஜித் விஜயமுனி சொய்சா நீர்ப்பாசனம், நீர்முகாமைத்துவ அமைச்சராகவும் பைசர் முஸ்தபா

  • பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சீனா பயணம் – பதில் பேச்சாளராக பிரியந்த ஜயகொட நியமனம்

    எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர புதன்கிழமை (10) சீனாவின் பீஜிங் நகரின் டென்ஜிங் பகுதியில் நடைபெறவுள்ள நீதி சம்பந்தமான பயிற்சி நெறியொன்றில் பங்குபற்றச் செல்லவுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • ஹிஸ்புல்லாவின் அமைச்சுப் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதால் பட்டாசுகள் இல்லை: பள்ளிவாயலில் துஆ பிரார்த்தனை!

    ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பிரதி அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சத்தியப்பிரமானம் நிகழ்வு 09.09.2015 புதன்கிழமை இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளதாக அரசியல் உயர்பீட உறுப்பினர் தெரிவித்தார்.

  • 93 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி!

    – MJ மன்செஸ்டர்: இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் சற்றுமுன்னர் மன்செஸ்டர், ஓல்ட் ட்ரப்ஃபோர்ட் மைதானத்தில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேச, பகல் இரவு போட்டியில், இங்கிலாந்து 93 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

  • பாம்பு விஷ முறிவு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவது ஏன்?

    லண்டன்: பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மெடிசன் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்கிற சர்வதேச மருத்துவ தொண்டு அமைப்பு எச்சரித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் உலக அளவில் உயிரிழப்பதாகவும் ஐந்துலட்சம் பேர் தமது அவயவங்களை இழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  • பிரதியமைச்சராகிறார் ஹிஸ்புல்லாஹ்..?

    – AF-90 கொழும்பு: இன்று புதன்கிழமை காலை இடம்பெறவுள்ள இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமனங்களில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

  • மத்திய கிழக்கில் புழுதிப்புயல்: மருத்துவமனையில் பலர் அனுமதி

    பெய்ரூட்: லெபனான், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் பெரும் புழுதிப்புயல் சூழ்ந்துள்ளது. இரு நாடுகளின் தலைநகரங்களான, பெய்ரூட் மற்றும் டமஸ்கஸ் ஆகிய நகரங்களை ஒரு மஞ்சள் நிற மாசு மண்டலம் சூழ்ந்துள்ளது.மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது வெளியே வர வேண்டிய சூழல் நேரிட்டால், அறுவை சிகிச்சையின் போது மருத்துவப் பணியாளர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

←Previous Page
1 … 330 331 332 333 334 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar