கொழும்பு: இன்று புதன்கிழமை காலை இடம்பெறவுள்ள இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமனங்களில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
ஏ. எச்.எம். பௌசி, தனக்கு முழு அமைச்சர் பதவிதான வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு ஆளும் கூட்டணி, தகுந்த பதில் கொடுக்காததால், அந்த இடத்திற்கு ஓர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கான ஆலோசனைகள் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற பின்னரே, நேற்று இரவு இச்செய்தி, காத்தான்குடிக்குள் ஹிஸ்புல்லாஹ் தரப்பினரால் மறைமுகமாக அறிவுப்புச் செய்யப்பட்டது.
எனினும் ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் நியமனங்களில், எத்தகைய அமைச்சு ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மீண்டுமொரு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட காத்திருப்பதையும் காணமுடிகிறது.
Published by

Leave a comment