மன்செஸ்டர்: இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் சற்றுமுன்னர் மன்செஸ்டர், ஓல்ட் ட்ரப்ஃபோர்ட் மைதானத்தில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேச, பகல் இரவு போட்டியில், இங்கிலாந்து 93 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 44 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து சார்பாக இளம் துடுப்பாட்டவீரர் ஜேம்ஸ் டைலர் தனது கன்னிச்சதத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment