ஹிஸ்புல்லாவின் அமைச்சுப் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதால் பட்டாசுகள் இல்லை: பள்ளிவாயலில் துஆ பிரார்த்தனை!

  • ஏ.எல்.டீன்பைரூஸ்

Hizbullaகாத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பிரதி அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சத்தியப்பிரமானம் நிகழ்வு 09.09.2015 புதன்கிழமை இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளதாக அரசியல் உயர்பீட உறுப்பினர் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களை இலங்கை நாட்டின் அதிபர் அதிஉத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் நல்லாட்சியின் பங்காளியாக தன்னோடு இனைத்துக் கொள்ளும் முகமாக அன்னாருக்கு இன்று வழங்கப்பட உள்ள பிரதி அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர பதவிப்பிரமானத்தை முன்னிட்டு இன்று அஸர் தொழுகையினை தொடர்ந்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் துஆ பிரார்த்தனைகள் இடம்பெற உள்ளதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.DF-YKK

Published by

Leave a comment