“இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றி “பத்கன் முபீனா” (மகத்தான வெற்றி)யாகும்: மௌலவி எஸ்.எம்.அலியார் தெரிவிப்பு

  • ஏ.எல்.டீன்பைரூஸ், FM. பர்ஹான்

duaகாத்தான்குடி: புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக இன்று சத்தியப்பிரமானம் செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜம்ஆ பள்ளிவாயலில் 09.09.2015 புதன்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஸலாத்துல் ஷூக்குர் தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் சத்தியப்பிரமானம் தொடர்பாக மௌலவி அல்ஹாபிழ் எம்.சாஜஹான் (பலாஹி) அவர்களினால் விசேட உரை நிகழ்தப்பட்டதுடன் காத்தான்குடி காழிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார்(பலாஹி) அவர்களினால் விசேட துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அப்பிழ் பழம், தோடம்பழம், ஈத்தம் பழம் என்பன வழங்கி ஆதரலாளர்கள் இறை இல்லத்தில் இபாதத்தின் மூலம் தங்கள் மகிழ்சிகளை தெரிவித்துக் கொண்டனர்.

dua

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி சம்மேளன் பிரதி தலைவர் அப்துல் ஜவாத், அஷ்ஷெய்ஹ் மும்தாஸ் (மதனி), காத்தான்குடி முன்னால் நகர முதல்வர் பிரதி நகர முதல்வர், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ,கல்விமான்கள், உலமாக்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டதினை காணக் கூடியதாக இருந்தது.

mosque

தனக்கு கிடைத்த அமைச்சு பதவி மற்றும் பள்ளிவாயல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் விசேட செய்தி தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்பட்டது. DF/FMF/YKK

Published by

2 responses to ““இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றி “பத்கன் முபீனா” (மகத்தான வெற்றி)யாகும்: மௌலவி எஸ்.எம்.அலியார் தெரிவிப்பு”

  1. Mohammed Fasleen Avatar

    நீங்கள் ஒரு பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தால் அது எதிரிகளின் கண்களுக்கு அவ்வளவு பிரச்சினையாக அமைதிருக்காது மாறாக ஒரு படி மேலே சென்று இராஜாங்க அமைச்சர் ஆனா காரணத்தினால் இரண்டு எதிரிகளின் கண்களுக்கும் உறுத்தலான விடயமே ஆகும்.
    முழு அமைச்சை கொடுத்து அல்லாஹ் உங்கள் அந்தஸ்தை உயத்தி இருக்கிறான்

    வாழ்த்துக்கள்
    தோல்விலும் வெற்றிக் கனியை சுவைக்கும் வித்தை தெரிந்தவர் நீங்கள் மாத்திரமே

    எதிரியின் வயிறில் உண்டான எரிமலை குழம்பு இனியாவது அடங்கி அமைதி பெறட்டும்.

    உங்களது தூய சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த அமைச்சுப் பதவியை காத்த நகர் மக்களாகிய நாங்கள் காண்கின்றோம்.

    வாழ்த்துக்கள்

  2. Congratulations

Leave a comment