கம்பஹா: கம்பஹா, கொட்டதெனிய பிரதேசத்தில் நேற்றுக் காலை காலை காணாமல் போயிருந்த குழந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.கொட்டதெனிய பிரதேசத்தில் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நான்கரை வயதுக் குழந்தையொன்று காணாமல் போயிருப்பதாக நேற்று வெளிவந்த தகவல் இலங்கை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான தகவல் வெளியானவுடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பனவும் அரசியல்வாதிகள் மற்றும் பொலிசாரிடம் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இதனையடுத்து பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களின் மத்தியில் நேற்று மாலை தொடக்கம் காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழுவொன்று களத்தில் இறக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைகளுக்காக களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு, காணாமல் போன குழந்தையின் சடலத்தை இன்று கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
காணமல் போன குழந்தையின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் வயற்பிரதேசம் ஒன்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
Published by


Leave a comment