கொழும்பு: இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
கொழும்பு – 07, இல. 09, பிலிப் குணவர்தன வீதியில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் தனது பிரதி அமைச்சருக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நாளை (14) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் உயர் அதிகாரிகள், சர்வமதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Published by

Leave a comment