Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சேபணையை ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்தது

    கொழும்பு: ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.நாட்டில் இடம்பெற்றுள்ள பெரும் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கூடியபோது, அதன் தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன இந்த முடிவை அறிவித்தார்.

  • இலஞ்சம் பெற்ற சுங்கத்தின் பெரும்புள்ளிகள் மறியலில்!

    கொழும்பு: 125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறும்போது, கையும் களவுமாக பிடிபட்ட சுங்க அதிகாரிகள் மூவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மூவரும் இன்றைய தினம் (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

  • “கஞ்சா கதை” பொலிஸ் அதிகாரியிடமிருந்து நஷ்டயீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கை

    நமது செய்தியாளர் பெரிதாகப் பார்ப்பதற்கு பிரதிகளின் மேல் சொடுக்குக.

  • ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமில்லை

    லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைவாக அரசியலமைப்பு சபையின் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமித்து ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பி வைத்து 14 நாட்களின் பின்னரும் ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கவில்லையாயினும் அந்த உறுப்பினர்கள் குறித்த ஆணைக்குழுக்களுக்கு நியமிப்பட்டிருப்பதாகவே கருதப்படல் வேண்டும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • மீன் பிடி இலாகா வீதியில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி மீன் பிடி இலாகா வீதியில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், கௌரவ அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டுடனர்.

  • கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்பட்டு சுத்திகரிக்கும் பணி காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்டது

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்பட்டு வடிகான்கள் சுத்திகரிக்கும் பணி காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்டது. இந் நிகழ்விற்கு பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • முல்லைத்தீவு: தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையே மீள்குடியேற்றத்தின் அடிப்படை

    முல்லைத்தீவு: ‘மீண்டும் வில்பத்தாகிறதா முள்ளியவளை’ இவ்வாறு தலைப்பிடப்பட்ட செய்திகள் முல்லைத்திவு முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுத்தும் நோக்கில் பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரபுரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்கள் காடுகளை அழித்து குடியேறி வருகிறார்கள் என தமிழ்த் தரப்பினர்களினால் உண்மைக்குப் புறம்பான முறையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

  • சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மாவட்ட நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

  • வீடியோ கதையாக்கச் செயற்றிட்டம் இளம் நாடக,திரைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்

    எம்.ரீ.எம். பாரிஸ் கொழும்பு: வீடியோவைஊடகமாகப் பயன்படுத்தி,பின்தங்கியமக்களின் கதைகளைவெளிஉலகிற்குஎடுத்துக்கூறி,அச்சமூகத்தினைவலுப்படுத்தும் உத்திமுறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது. இத்தகையகதைகூறல் மூலம் இளம் வீடியோதயாரிப்பாளர்களும் பின்தங்கியநிலையில் வாழும் மக்களும் ஒன்றாக இணைந்து,சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு,அவற்றைகுறுந்திரைக் கதைகளாகஉருவாக்கலாம்.

  • வாசிப்பு மாதம்

    வாசி… வாசி .. என்று மல்லுக் கட்டுவாள் அம்மா ஆசிரியர் ஒரு புறம் அடிப்பார்.. நேர்த்தியாய் வாசிக்க வார்த்தை துண்டுக்ள் கொட்டுண்ணும்.

  • மரணிக்கும் பலஸ்தீனரின் முகத்தில் பன்றி இறைச்சி திணிக்கும் இஸ்ரேல் பொலிஸ்

    ஹெப்ரூன்: மரணித்துக் கொண்டிருக்கும் பலஸ்தீனர் ஒருவரின் முகத்தின் மீது இஸ்ரேலிய பொலிஸார் ஒருவர் பன்றி இறைச்சியை திணிக்கும் வீடியோ ஒன்று சமூகதளங்களில் அதிகம் பேரின் அவதானத்தை பெற்றுள்ளது.

  • “ஐக்கியஅடையாளம் வித்தியாசங்களில் சமத்துவம்” தேசியகுறுந் திரைப்படவிழா போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

    எம்.ரீ.எம். பாாிஸ் கந்தளாய்: சமாதானம், சகவாழ்வு, பல்வகைத்துவம், ஏனைய சமயங்களையும் சமூகங்களையும் மதித்தல் மற்றும் விழுமியங்களைக் கடைப்பிடித்தல் போன்றவிடயங்களை இளைஞர் யுவதிகளிடம் ஏற்படுத்தும் பொருட்டுகிராமியப் பொருளாதாரமற்றும் சமூகஅபிவிருத்திஅமைப்பினால் “தேசியகுறும்திரைப்படவிழா” போட்டிஒன்றுஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 304 305 306 307 308 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar