ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமில்லை

  • லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார்

parliament[1]கொழும்பு: அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைவாக அரசியலமைப்பு சபையின் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமித்து ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பி வைத்து 14 நாட்களின் பின்னரும் ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கவில்லையாயினும் அந்த உறுப்பினர்கள் குறித்த ஆணைக்குழுக்களுக்கு நியமிப்பட்டிருப்பதாகவே கருதப்படல் வேண்டும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைவாக 41(ஆ) ஏற்பாட்டின் 4ஆவது உறுப்புரைக்கு அமைவாக அவ்வாறு நிகழ்வதாகத் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பில் அரசியலமைப்பு சபையினால் பெயர் குறிப்பிடப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரியவருகிறது.

அரசியலமைப்பின் 41(ஆ) ஏற்பாட்டின் 4ஆவது உறுப்புரை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

(4) ஜனாதிபதியின் அத்தகைய நியமனங்களுக்கான பேரவையின் விதப்புரைகளைப் பெற்றுக்கொண்ட பதின்நான்கு நாட்களினுள் இவ்வுறுப்புரைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் தவிசாளர்களையும் உறுப்பினர்களையும் நியமித்தல் வேண்டும். சனாதிபதி, அத்தகைய பதின்நான்கு நாட்களுக்குள் அவசியமான நியமனங்களைச் செய்யத்தவறும் பட்சத்தில் –

(அ) ஆணைக்குழுவொன்றின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு (3) ஆம் பந்தியின் கீழ் விதந்துரைக்கப்பட்ட ஆட்கள், அத்தகைய காலப்பகுதி முடிவுற்ற தேதிலிருந்து பயன்பட, ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களாகக் கருதப்படல் வேண்டும் : அத்துடன்

(ஆ) ஆணைக்குழுவொன்றின் தவிசாளராக நியமிக்கப்படுவதற்கு (3) ஆம் பந்தியின் கீழ் விதந்துரைக்கப்பட்ட பெயர்கள் பட்டியலில் எவரின் பெயர் முதலாவதாக உள்ளதோ அவர், அத்தகைய காலப்பகுதி முடிவுற்ற தேதிலிருந்து பயன்பட, ஆணைக்குழுக்களின் தவிசாளராகக் கருதப்படல் வேண்டும்.

Published by

Leave a comment