இலஞ்சம் பெற்ற சுங்கத்தின் பெரும்புள்ளிகள் மறியலில்!

customsகொழும்பு: 125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறும்போது, கையும் களவுமாக பிடிபட்ட சுங்க அதிகாரிகள் மூவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மூவரும் இன்றைய தினம் (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

சுங்க அதிகாரி பராக்கிரம ஜினதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க  அதிகாரி எம்.டி.யு.ஜி. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 150 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை வரியின்றி விடுவிப்பதற்காக, நேற்று (15) குறித்த மூவரும் 12.5 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட போது கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச ஊழல் திணைக்களத்தில் அகப்பட்ட மிகவும் அதிகமான இலஞ்சத் தொகை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment