கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்பட்டு சுத்திகரிக்கும் பணி காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்டது

  • ஏ.எல். டீன்பைரூஸ்

shibly nazeer hafisகாத்தான்குடி: கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்பட்டு வடிகான்கள் சுத்திகரிக்கும் பணி காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்டது. இந் நிகழ்விற்கு பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்படுவதன் ஊடாக இருக்கின்ற வளங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் பாரிய வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு ஏதுவானதாகவும் இனங்களுக்கிடையே பரஸ்பரம் ஒற்மை,புரிந்துணர்வுகளை கட்டி எழுப்புவதற்கும் இக் கொத்தணி முறையிலான சுத்திகரிக்கும் பணி வழிவகுக்கும் என காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்ட இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவிதார்.

shibly nazeer hafis

கிழக்கு மாகாணம் முழுவதுமாக அமைக்கப்பட்ட இக் கொத்தணி முறையிலான துப்பரவு செய்யும் பணிகள் காத்தான்குடி,ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி போன்ற உள்ளுராட்சி மன்றங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு மூன்று பிரதேசங்களையும் துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்படத்தக்கது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர், அரச அதிகார்கள், உட்பட திணைக்களத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment