-
எம்.ரீ.எம். பாாிஸ்
கந்தளாய்: சமாதானம், சகவாழ்வு, பல்வகைத்துவம், ஏனைய சமயங்களையும் சமூகங்களையும் மதித்தல் மற்றும் விழுமியங்களைக் கடைப்பிடித்தல் போன்றவிடயங்களை இளைஞர் யுவதிகளிடம் ஏற்படுத்தும் பொருட்டுகிராமியப் பொருளாதாரமற்றும் சமூகஅபிவிருத்திஅமைப்பினால் “தேசியகுறும்திரைப்படவிழா” போட்டிஒன்றுஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த “தேசிய குறுந்திரைப்பட விழா” யிற்கானஆக்கங்கள் தமிழ் மற்றும் சிங்களமொழிகளில் சமர்ப்பிக்கலாம்.
இதற்கானவிண்ணப்பதாரிகள் 18-25 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இதற்குமுன் குறும்திரைபடஆக்கங்களில் அனுபவம் உள்ளவர்ள் பற்றியும் அதற்கான விருதுகளோசான்றிதழ்களோ பெற்றவர்கள் பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படும்.
இதற்கானவிண்ணப்பப் படிவங்கள் ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்குமுன் அனுப்பப்படல் வேண்டும்.
விண்ணப்பங்களிலிருந்து சிங்கள் மற்றும் தமிழ் மொழி மூலமான 30 இளைஞர், யுவதிகள் தெரிவுசெய்யப்படுவர்.
இவர்களுக்கு முதலில் 5 நாட்கள் குறுந்திரைப்பட தயாரிப்புபற்றிய பயிற்சி நெறியொன்று வழங்கப்படும்.
இதற்குப் பின் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் பங்குபற்றுனர்கள் தங்களால் ஆக்கப்பட்டகுறும்திரைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
இவற்றில் மிகச் சிறந்த மூன்று குறும்திரைப் படங்களுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.
அத்தோடு மேலும் ஏழு குறுந்திரைப்படங்கள் குறுந்திரைப்படவிழா தினத்தில் காட்சிப்படுத்தப்படுவதோடு, பத்துகுறுந்திரைப் படங்களும் தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்துதரப்படும்.
மேற்குறித்தவிடயத்தில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பின்வரும் முகவரிக்கு பூரணப்படுத்தப்பட்ட தங்களதுவிண்ணப்பங்களை அனுப்பலாம்.
-
கிரமியப் பொருளாதாரமற்றும் சமூகஅபிவிருத்திஅமைப்பு 81,பிரதானவீதி, கந்தளாய். 0777073441 0718161660 E-Mail – recdosl@gmail.com

Leave a comment