மீன் பிடி இலாகா வீதியில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது

  • ஏ.எல். டீன்பைரூஸ்

shiblyகாத்தான்குடி: புதிய காத்தான்குடி மீன் பிடி இலாகா வீதியில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், கௌரவ அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டுடனர்.

மீன் பிடி இலாகா வீதியில் மிக நீண்ட காலமாக ABC கல் கலவை இடப்பட்டு காணப்படுவதனால் வாகனங்கள் பயணிக்கின்ற போது அதில் இருந்து எழும் கல் தூசு காரணமாக அவ் வீதி ஓரத்தில் வீடுகளில் வசிக்கும் பெண்கள், பிள்ளைகள் பாதிக்கப்படுவதை கவனத்திற் கொள்ளப்பட்டு முதற்கட்டமாக 18 இலட்சம் ரூபா செலவில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுது.

shibly

குறித்த வீதியில் சுமார் 400 மீட்டர் துாரத்திற்கு மேல் கொங்ரீட் மேற்பரப்பு இட வேண்டியுள்ளதாகவும் ஆனால் தற்போது சுமார் 120 மீட்டர் துாரத்திற்கே தற்போது கொங்ரீட் மேற்பரப்பு இடப்பட இருப்பதாகவும் இதன் போது அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

fishers lane road

குறித்த வீதியினை முழுமையாக கொங்ரீட் இட்டு தருமாறு பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Published by

Leave a comment