வீடியோ கதையாக்கச் செயற்றிட்டம் இளம் நாடக,திரைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்

  • எம்.ரீ.எம். பாரிஸ்

video cameraகொழும்பு: வீடியோவைஊடகமாகப் பயன்படுத்தி,பின்தங்கியமக்களின் கதைகளைவெளிஉலகிற்குஎடுத்துக்கூறி,அச்சமூகத்தினைவலுப்படுத்தும் உத்திமுறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது. இத்தகையகதைகூறல் மூலம் இளம் வீடியோதயாரிப்பாளர்களும் பின்தங்கியநிலையில் வாழும் மக்களும் ஒன்றாக இணைந்து,சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு,அவற்றைகுறுந்திரைக் கதைகளாகஉருவாக்கலாம்.

வீடியோ மூலும் கதைகூறும் இத்தகையமுறைஇது மக்களால் மக்களுக்காகஉருவாக்கப்பட்டஒன்றாகும். இதன் மூலம் மக்கள் தமதுஅபிவிருத்திசார் பிரச்சினைகளைஅடையாளம் கண்டுஅதற்குதீர்வினையும் காணமுடிவதுடன் தமதுகதைகளைஎடுத்துக் கூறவும் முடிகின்றது.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றம் இத்தகைய மூன்று செயற்றிட்டங்களை நடத்ததிட்டமிட்டுள்ளது. இதில் இரண்டு செயற்றிட்டங்கள் மாத்தறைமற்றும் கண்டிமாவட்டங்களில் அமுல்படுத்தவுள்ளன. மூன்றாவதுதிட்டம் பல்கலைக்கழகங்கள்,சமூகசேவைநிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் நலன் கருதிநாடுதழுவியரீதியில் இடம்பெறவுள்ளது.

இத்திட்டங்களின் நோக்கம் இளைஞர்களிடம் உள்ளவீடியோ மூலம் கதைசொல்லும் திறணைஊக்குவித்து,பின்தங்கியகிராமங்களில் மக்கள் எதிர்கொள்ளும் அபிவிருத்திசார் பிரச்சினைகளைஅடயாளப்படுத்துவதாகும்.

18-25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். சகலசெயற்றிட்டங்களிலும் வெளிநாட்டுமற்றும் உள்நாட்டுபயிற்றுவிப்பாளர்களிடம் பயிற்சிபெறும் வாய்புஉள்ளது. பயிற்சிமுடிவில் பங்குபற்றும் சகலரும் வீடியோ மூலம் கதைகளைஉருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பர். இப் பயிற்சிநெறியின் இறுதியில் சான்றிதழ்களும்வழங்ப்படும்.

மூன்றுசெயற்றிட்டங்களும் இலவசமாக இடம்பெறஉள்ளதால் குறித்ததொகையினர் மாத்திரமேதெரிவுசெய்யப்படுவர்.

கண்டிமற்றும் மாத்தறைமாவட்டங்களில் இடம்பெறஉள்ள இரண்டுசெயற்றிட்டங்களில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்குஅதிகமுனுரிமைவழங்கப்படும்.

அத்தோடு,நாடுதழுவியரீதியில் இடம்பெறஉள்ளசெயற்றிட்டத்தில் இளம்பட்டதாரி,பல்கலைக்கழக,தனியார் ஊடகமற்றும் தொழிநுட்பமாணவர்கள்,சமூகசெயற்பாட்டாளர்கள்,இளம் வீடியோஆர்வலர்கள் போன்றோர் பங்குபற்றலாம்.

விண்ணப்பமுடிவுத்திகதி : 15/11/2015

ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் info@Lfjf.org மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களைஅணுப்பிவைக்கலாம்.

தபால் மூலம் விண்ணப்பிக்கவிரும்புவோர் –

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகநிலையம், இல. 249, 2/1,நாவலவீதி, ராஜகிரிய எனும் முகவரிக்குவிண்ணப்பங்களைஅனுப்பலாம்.

தொடர்புகளுக்கு : 0117209511 மற்றும் 0776653694 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.

Published by

Leave a comment