Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மார்புப்புற்று நோயும்,நவீன சிகிச்சை முறைகளும் எனும் தலைப்பில் பெண்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் அனுசரணையுடன் மார்புப்புற்று நோயும்,நவீன சிகிச்சை முறைகளும் எனும் தலைப்பில் பெண்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்வு எதிர்வரும் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.மணிக்கு ஏறாவூர் அல் மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ மஸ்ஜிதில் இடம்பெறவுள்ளது.

  • ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா இணைந்து பொது மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்

    ஜம்இய்யா காத்தான்குடி காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நிர்வாகப் பரம்பலுக்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்படும் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் கடந்த 09.12.2012ம் திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பொதுச்சபை உறுப்பினர்கள், ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சகல பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில்

  • “எத்தகைய இடையூறு வந்தாலும் பௌத்தர்களின் உரிமையை காக்க தொடர்ந்தும் போராடுவேன்”- ஞானசார

    கொழும்பு: பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்குமாறுகோரி, சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான மாலபேயில் அமைந்துள்ள கத்தோலிக்க போதனை நிலையமொன்றை, 2008ஆம் ஆண்டு தாக்கி சேதப்படுத்தியதற்காக கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் இந்த வழக்கை…

  • ஷீஆக்களுக்கெதிராக ஓட்டமாவடியில் மாபெரும் மாநாடு களமிறங்குகிறது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்

    ஓட்டமாவடி: வல்ல இறைவனின் பேருதவியால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டமாவடி மீராவோடைப் பகுதியில் ஷீஆக்களுக்கெதிரான மாநாட்டு நிகழ்ச்சியை நடாத்த களமிறங்குகின்றது. அல்ஹம்துலில்லாஹ்! இந்நிகழ்வில்… 1.ஓட்டமாவடியில் உள்ள ஷீஆக்கள் உண்மையிலேயே ஷீஆக்களா?

  • காத்தான்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்த 7வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த 22.02.2016 அன்று காத்தான்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா ஸாரா எனும் 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று 01.03.2016 காலை 11 மணியளவில் வபாத்தாகியுள்ளார்.

  • காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு குளிரூட்டிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் நிதியுதவியின் கீழ் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டி மற்றும் சக்கர நாற்காலிகள் என்பன வழங்கும் நிகழ்வு நேற்று 28 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

  • ஜேர்மனியில் 135,000 அகதிகள் மாயம்

    பேர்லின்: ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரி தம்மை பதிவு செய்தவர்களில் சுமார் 135,00 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 2015ஆம் ஆண்டு, ஜேர்மனியில் சுமார் பதினொரு இலட்சம் பேர் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 13 % தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • வீதி விபத்துக்களும் சில பின்னணிக்காரணங்களும்

    முஹம்மது நியாஸ் இலங்கை நாட்டில் சமகாலத்தில் நாளாந்தம் நிகழ்ந்தேறி வருகின்ற வீதி விபத்துக்கள் மூலமாக வாகன சாரதிகளும் பொதுமக்களும் சடுதியான உயிரிழப்புக்களையும் நிரந்தர இயலாமைகளையும் சந்தித்து வருவதை நாம் அவதானிக்கிறோம்.

  • நாடளாவிய ரீதியில் 55வயதிற்கு மேற்பட்ட இமாம்கள் ,முஅத்தின்கள் 500 பேருக்கு இலவசமாக உம்றா கடடைமைய நிறைவேற்ற ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் ஏற்பாடு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நாடளாவிய ரீதியில் பல்வேறு பட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனினால் இலங்கையின் நாலா பாகங்களிலும் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்களில் தற்போது இமாம்களாக மற்றும் முஅத்தின்களாக கடமையாற்றும் 55வயதிற்கு மேற்பட்ட இதுவரை புனித உம்ரா ,ஹஜ் கடமையினை மேற்கொள்ளாத இறை இல்லங்களின் இறை பணியாளர்களுக்கு இலவசமாக புனித உம்றா கடடைமைய நிறைவேற்றுவதற்கான முழுமையான அனுசரணையை வழங்க ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் தலைவரும்,புனர்வாழ்வு மற்றும் இராஜாங்க…

  • காத்தான்குடியில் கட்டாய மதமாற்றமா?

    முஹம்மது நியாஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகளோ அல்லது சமூக நிறுவனங்களோ வலுக்காட்டாயமாகவோ அல்லது பணத்தாசை காட்டியோ மாற்றுசமய மக்களை இஸ்லாமிய மார்க்கத்தினுள்ளே இழுத்துவரவில்லை.

  • துஆ செய்யுங்கள்

    காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸஜீ அவர்களின் சகோதரியான பாத்திமா ஸாறா (7வயது), நேற்று(23/2/2016) மேல் மாடியில் இருந்து விழுந்து உபாதைக்குள்ளானார். தொடர்ச்சியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். பாத்திமா ஸாறா விரைவில் குணமடைய துஆ செய்யும்படி குடும்பத்தினர் விணயமாக கேட்டுக்கொள்கின்றனர்.

  • வறுமையில் வாழும் வலதுகுறைந்த பெண்ணுக்கான உதவிகோரல்

    அபு அகமட் காத்தான்குடியைச் சேர்ந்த ரஸ்மிலா (வயது 37) என்ற இந்தப் பெண்ணுக்கு ஒரு கண்ணில் பார்வையில்லாத நிலையில் தலையின் பிற்பகுதியில் ஒரு கட்டியும் முதுகில் பாரிய கட்டி ஒன்றும் வயிற்றுப் பகுதியில் பெரிய கல்லும் இருக்கின்ற நிலைமையில் நடக்கக்கூட முடியாமல் படுத்த படுக்கையிலேயே தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

←Previous Page
1 … 242 243 244 245 246 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar