காத்தான்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்த 7வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

Childகாத்தான்குடி: கடந்த 22.02.2016 அன்று காத்தான்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா ஸாரா எனும் 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று 01.03.2016 காலை 11 மணியளவில் வபாத்தாகியுள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அருகில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் வீட்டின் மாடி ஒன்றிலிருந்தே தவறி விழுந்து வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Child

காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியைச் சேர்ந்த இச்சிறுமி ஊடகவியலாளர் எம்.எஸ்.எம் சஜீயின் ஒரேயொரு சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment