Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இவ்வருடம் 4500 பேர் செல்வதற்கான ஹஜ் கோட்டா கிடைக்கும் சாத்தியம்

    ஜித்தா: இம்முறை புனித ஹஜ் கோட்டா அதிகரிப்பதற்கான இணக்கப்பாடு கிட்டியுள்ளதாகவும் கடந்த வருடம் 2800 பேர் அளவில் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றதாகவும் இம்முறை சுமார் 4500 பேர் அளவில் ஹஜ் செல்வதற்கான ஹஜ் கோட்டா கிடைக்கபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ள முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அங்கிருந்து தெரிவித்தார்.

  • குளியாப்பிட்டிய சிறுவனின் கல்விக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி

    குளியாப்பிட்டிய: எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியால் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்ட சிறுவன், தனது கல்வியை தொடர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.  பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிறுவனின் வீட்டுக்குள் சென்று, அவருக்கு உணவு ஊட்டி அவருடன் விளையாடியதை, இந்த சிறுவன் தமது பிள்ளைகளுடன் பள்ளியில் கல்வி கற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பார்த்தனர்.

  • “கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்”

    லண்டன்: கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

  • “புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

    லண்டன்: மனித உடலில் `நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி’ புற்றுநோயை அழிக்கும் முறைமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். புற்றுநோய் உள்ள செல்களுக்கு உள்ளே, இயல்பாகவே இருக்கும் பலவீனம் ஒன்றை தாம் கண்டறிந்துள்ளதாக யுனிவர்சிட்டி கொலேஜ் ஓஃப் லண்டனைச் (யு.சி.எல்) சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  • இன்று முதல் கொழும்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்

    கொழும்பு: அண்மைய நாட்களாக தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீ்ழ் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

  • இந்தியா – பாகிஸ்தான் போட்டி: “மத்திய பாதுகாப்பு படையை பாதுகாப்பு அனுப்ப தயார்”

    டெல்லி: இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சலாவில் நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படையை அனுப்பி பாதுகாப்பு வழங்க தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம்…

  • காரமுனை ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்கள்

    கோறளைப்பற்று: மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமமான காரமுனை ஜூம்ஆ பள்ளிவாயலுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவு 2016.03.04ஆந்திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின் காரமுனை ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிருவாகத் தெரிவானது அன்றைய தினம் ஜூம்ஆ குத்பா உரையாற்றிய எம்.யூ. மஜீட் (சிறாஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிறுவாகத் தெரிவில் உரையாற்றிய அவர்,

  • 220 பயணிகளுடன் விமானத்தை தரையிறக்குகையில் சவுதி விமானி மாரடைப்பால் மரணம்

    SHM ரியாத்: சவுதி அரேபியாவில் சவுதி அரேபியன் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள பிஷா நகரில் இருந்து சவுதி அரேபியன் நிறுவன விமானம் 220 பயணிகளுடன் ரியாத் நகருக்கு புறப்பட்டது. விமானத்தை விமானி வலித் பின் முகமது அல் முகமதுஇ ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றார்.

  • எச்.ஐ.வி. வதந்தி: சிறுவனின் கல்வி உரிமையைப் பாதுகாக்க அடிப்படை உரிமை மனு தாக்கல்

    கொழும்பு: எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனப் பரவிய வதந்தியால், தனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கல்வி அமைச்சர், குளியாப்பிட்டிய வலயக் கல்வி பணிப்பாளர், குளியாப்பிட்டியவிலுள்ள இரண்டு பள்ளிக்கூடங்களின் அதிபர்கள் உட்பட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • “ரி-20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி பிரகாசிக்கும்”

    டாக்கா: இந்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாக உள்ள ரி-20 உலகக் கோப்பை போட்டிகளில், தான் விளையாட உள்ளதாக இலங்கையின் மூத்த வீரர் லசித் மலிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.இலங்கை கிரிக்கெட் அணி, அண்மைய நாட்களாக போட்டிகளில் பிரகாசிக்க தவறி வரும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

  • காத்தான்குடி நகரை அதி சிறந்த சுத்தமான நகராக திகழ வைக்கும் வேலைத்திட்டம் காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரை அதி சிறந்த சுத்தமான நகராக திகழ வைக்கும் விஷேட வேலைத் திட்டம் காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காத்தான்குடி நகர சபையின் விஷேட ஆணையாளரும்,செயலாளருமான ஜே.சர்வேஸ்வரின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபை சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களின் உதவியுடன் மேற்படி திட்டம் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

  • சமாதான ஓவியத்திற்காக ஜனாதிபதி பாராட்டு பெற்ற காத்தான்குடி ஓவியர் மாஹிர்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இனங்களுக்கிடையிலான இன நல்லுறவையும்,சமாதானத்தையும் சித்தரிக்கும் வகையிலான ஓவியத்தை மிகவும் திறமையாக வரைந்தமைக்காக காத்தான்குடி-06ம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த ஓவியர் முஹம்மட் மாஹிர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

←Previous Page
1 … 241 242 243 244 245 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar